செட்டிநாடு சிக்கன் மிளகு கெட்டிகுழம்பு (Chittinadu chicken milagu kulambu recipe in tamil)

செட்டிநாடு சிக்கன் மிளகு கெட்டிகுழம்பு (Chittinadu chicken milagu kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். சிக்கனுடன் தயிர் 1\4கப், மஞ்சள் தூள் 1\2ஸ்பூன், எலுமிச்சம் பழம் பிழிந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் விட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடி கனமான கடாயில், நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கல்பாசி பூ, ஸ்டார் பூ, சோம்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளியையும் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்
- 4
தக்காளி, வெங்காயம் வதங்கிய கொண்டிருப்பதற்கு இடையில் கழுவிய சிக்கனில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், 1\2ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும். தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு பிசறிய சிக்கனை சேர்க்கவும்
- 5
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடங்கள் வரை கிளறிக் கிளறி விடவும்
- 6
பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பாதி அளவு உப்பு சேர்த்து அதாவது சிக்கனுக்கு மட்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 7
15 நிமிடங்கள் பிறகு திறந்து பார்த்தால் சிக்கன் முக்கால் பதம் அளவு வெந்திருக்கும்.
- 8
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து சிக்கனுடன் சேர்க்கவும்.
- 9
இப்போது பாதி அளவு உப்பு அதாவது கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் மூடி 10 நிமிடங்கள் அதிக தணலில் வைத்திருக்கவும்
- 10
பத்து நிமிடங்கள் பிறகு திறந்தால் சிக்கன் முழுதும் வெந்து இப்போது சிறிது கெட்டி பதமாக இருக்கும். அடுப்பை மிகக் குறைவான தணலில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். டேஸ்டியான, காரசாரமான, செட்டிநாடு சிக்கன் மிளகு கெட்டிகுழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3 அசைவத்தில் சிக்கன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் செட்டிநாடு ஸ்டைலில் செய்யற சிக்கன் டேஸ்ட் பண்ணி பாருங்க. காரசாரமா இருக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். A Muthu Kangai -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
-
-
-
More Recipes
கமெண்ட்