சிக்கன் செட்டிநாடு குழம்பு

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

சிக்கன் செட்டிநாடு குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1/2 கிலோசிக்கன்
  2. 1வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  5. வறுத்து அரைக்க
  6. 2 தேக்கரண்டிமல்லி
  7. 1 தேக்கரண்டிசீரகம்
  8. 1/2 தேக்கரண்டிமிளகு
  9. 1/2 தேக்கரண்டிசோம்பு
  10. ஏலக்காய்
  11. 4கிராம்பு
  12. சிறிய துண்டுபட்டை -
  13. சிறிய பகுதிநட்சத்திர சோம்பு
  14. 1பிரியாணி இலை
  15. 5வத்தல்
  16. 1 கொத்துகருவேப்பிலை
  17. 1 கப்தேங்காய் பூ
  18. 2 மேஜைக்கரண்டிதேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்களில் தேங்காய் பூ தவிர மற்றவைகளை வறுத்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.

  3. 3

    ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடேறியதும் மிதமான சூட்டில் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    1 கொத்து கருவேப்பிலை சேர்க்கவும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்

  5. 5

    வெங்காயம் தக்காளி நன்கு வதக்கி வந்ததும் சிக்கன் சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வேக வைக்கவும்.

  6. 6

    தேங்காய் பூ தனியே மணம் வரும் வரை வறுத்து தண்ணீர் விட்டு பசையாக அரைத்து கொள்ளவும்.

  7. 7

    சிக்கன் வெந்ததும் குக்கரை திறந்து தேங்காய் விழுது 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்

  8. 8

    தேங்காய் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.

  9. 9

    சப்பாத்தி, பரோட்டா, சூடு சாதம் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes