மொறு மொறு மிளகு வடை(milagu vadai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#Wt1 - மிளகு
மருத்துவகுணம் நிறைந்த மிளகை அன்றாடம் நாம் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25-30 நிமிடங்கள்
25 பரிமாறுவது
  1. 1கப் உளுத்தம் பருப்பு
  2. 2டேபிள்ஸ்பூன் பச்சரிசி மாவு
  3. 2 ஸ்பூன் மிளகு தூள்
  4. 1 ஸ்பூன் நெய்
  5. உப்பு,
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25-30 நிமிடங்கள்
  1. 1

    உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்து, வடிகட்டி கொஞ்சம் கூடே தண்ணி இல்லாமல் எடுத்து வைத்துக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் உலர்ந்த உளுத்தம்பருப்பு சேர்த்து தண்ணி விடாமல் ஒன்னிரண்டாக அரைத்து எடுத்துக்கவும். நைசா அரைக்க கூடாது

  3. 3

    அரைத்த மாவை ஒரு பவுலில் போட்டு அத்துடன் அரிசிமாவு, மிளகு தூள், உப்பு, நெய் சேர்த்து நன்றாக பிசைந்துக்கவும்.

  4. 4

    ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவு எடுத்து இலையில் வைத்து மெல்லிசா தட்டி நடுவில் ஓட்டை போட்டுக்கவும்.

  5. 5

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் ஒவொன்னாக எடுத்து எண்ணையில் போட்டு நன்கு சிவந்து மொறு மொறுன்னு வந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்

  6. 6

    ஆஞ்சநேயர் கோவில் வடை போல் அவளவு சுவையாக இருக்கும்...2 வாரம் ஆனாலும் கெட்டு போகாது. வெச்சிருந்து சாப்பிடலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes