சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#pongal2022

சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. ½ கப் நெய்
  2. ¾ கப் சீரக சம்பா
  3. ¼ கப் பயத்தம் பருப்பு
  4. 6 கப் பால்
  5. 2 தேக்கரண்டி குங்குமப்பூ
  6. 1தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  7. 1கப் பொடித்த வெல்லம்
  8. சிட்டிகை உப்பு
  9. 30 முந்திரி
  10. ¼ கப் உலர்ந்த திராட்சை
  11. சக்கரை பொங்கல்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    குங்குமப்பூவை ஒரு சிறிய கிண்ணத்தில் மேஜை கரண்டி வெந்நீரில் ஊறவைக்க. கரைந்து சிகப்பு நிறமாகும்
    மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேன் வைக்க’ 1 மேஜை கரண்டி சேர்க்க. உறுகியவுடன் நெருப்பை குறைத்து சீரக சம்பா, பயத்தம் பருப்பு லேசாக வாசனை வரும்வரை வறுக்க. வறுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் 2 கப் பால் + 1 கப் நீருடன் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க.

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் வெல்லம் 1 கப் நீருடன் ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்க வைக்க. வேகவைத்த அரிசி கலவை சேர்க்க. நன்றாக கொதிக்கட்டும். சிட்டிகை உப்பு சேர்த்து கிளற 1 கப் பால் சேர்க்க குங்குமப்பூ சேர்க்க. பால் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. அடிபிடிக்காமல் இருக்க. கிளறிக்கொண்டே இருக்க.

  4. 4

    நெருப்பை குறைக்க. பால் பொங்கட்டும். சிறு துருவியை பாத்திரத்தில் மேல் வைத்து ஃபிரெஷ்ஆக ஜாதிக்காய், அதிமதுரம் துருவுக. அடுப்பை அணைக்க. சக்கரை பொங்கல் தயார், ¼ கப் நெய்யில் முந்திரி, திராட்சை குறைந்த நெருபின் மேல் ஸ்கிலேட் வைத்து வறுக்க; பின் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க, 1 நிமிடம்.

  5. 5

    வறுத்த பொருட்களை சக்கரை பொங்கல் கூட சேர்க்க, கிளற. மீதி நெய்யும் சேர்த்து கிளற. சுவையான அழகிய சக்கரை பொங்கல் ருசி பார்த்து சுவைக்க தயார். பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. எல்லோரோடும் பகிர்ந்து பண்டிகை கொண்டாடுக.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes