சாப்டான ஜாங்கிரி (jangiri recipe in tamil)

#made2 ஜாங்கிரி சாதாரண உளுந்தில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது.. கடைகளில் கேட்டால் ஜாங்கிரி உளுந்து என்று தருவார்கள் அதில் செய்யும்போது பேக்கரியில் கிடைப்பதுபோல் அருமையாக இருக்கும்
சாப்டான ஜாங்கிரி (jangiri recipe in tamil)
#made2 ஜாங்கிரி சாதாரண உளுந்தில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது.. கடைகளில் கேட்டால் ஜாங்கிரி உளுந்து என்று தருவார்கள் அதில் செய்யும்போது பேக்கரியில் கிடைப்பதுபோல் அருமையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்... ஊறியதும் சிறிது தண்ணீர் தெளித்து வடை பதத்திற்கு அரைக்கவும்.. தண்ணியாக இருக்க கூடாது கெட்டியாக இருக்க வேண்டும்...
- 2
அரைத்த மாவை ஒரு அகலமான தட்டில் சேர்த்து அதில் ஃபுட் கலரையும் சேர்த்து ஐந்து விரல்கள் கொண்டு வட்டமாக மாவை 15 நிமிடங்கள் நன்றாக தேய்க்க வேண்டும்... ஒரே பக்கமாக மட்டுமே தேய்க்கவேண்டும்... முன்னும் பின்னுமாக தேய்த்தால் ஜாங்கிரி ஹார்டாக இருக்கும்.. 15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் மாவு நன்றாக புசுபுசுவென்று இருக்கும்...
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்றாக ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும்
- 4
அதில் ஃபுட் கலர் எலுமிச்சைச்சாறு ஏலக்காய் தூள் சேர்க்கவும்... எலுமிச்சை சாறு எதற்காக என்றால் சர்க்கரை பாகு இறுகி விடாமல் இருப்பதற்காக..
- 5
எண்ணையை அடி தட்டையான கடாயில் விடவும்.. குழிவான கடாயில் எண்ணெய் விட்டால் புழியும் போது ஷேப் சரியாக வராது.. மாவுடன் கார்ன்ஃப்ளாரையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.. ஜாங்கிரி செய்வதற்கு என்றே ஒரு துணி உண்டு அதில் சிறிய ஓட்டை போட்டு வைத்திருப்பார்கள் அந்தத் துணியில் ஜாங்கிரி மாவை சேர்க்கவும்..
- 6
கடாயில் அதிக எண்ணெய் ஊற்றக் கூடாது ஒரு இன்ச் அளவு இருந்தாலே போதுமானது.. அதில் ஜாங்கிரி முதலில் இரண்டு சுற்றுகள் சுற்றி பிறகு குட்டி குட்டி சுற்று சுற்றினால் ஜாங்கிரி தயாராகிவிடும்
- 7
நான்கைந்து ஜாங்கிரிகளைப் பொரித்து எடுக்கலாம்
- 8
பொரித்தெடுத்த ஜாங்கிரிகளை சூடான சர்க்கரைப் பாகில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்தால் ஜாங்கிரி தயார்
- 9
இதே மாவை குட்டி குட்டியாக செய்தால் மினி ஜாங்கிரி தயார்
- 10
இப்போது அருமையான சாப்டான ஜாங்கிரி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
-
-
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
-
-
-
-
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
-
ஃபாண்டன்ட் ஹார்ட் மேக்ரோன்ஸ் (fondant heart Macaroons recipe in tamil)
#made2இது உண்மையான மேக்ரோன்ஸ் இல்லை... ஃபாண்டன்டை வைத்து செய்தது.. இது செய்வதற்கு அகர் அகர், ஜெலட்டின் எதுவும் தேவைப்படாது.. Muniswari G -
SCOOBY & FISH in Rice cake (Rice cake recipe in tamil)
#steam கொரியன் சீரியல்களை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். கொரியன் சீரியல்களை பார்க்கும் பொழுது அவர்களுடைய உணவுப் பழக்கத்தில் இது போன்ற வடிவத்தில் செய்த கேக் மற்றும் பன் அவர்கள் விரும்பிச் சாப்பிடுவர். அதனுடைய தாக்கத்தினால் அதே வடிவத்தில் நான் நமது சுவையில் ரைஸ் கேக் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. சர்க்கரை சேர்த்து செய்த அதிரசம் போல் இதன் சுவை இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
-
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
வால்நட் டேட்ஸ் பட்டர் ஸ்காட்ச்(Walnut dates butter scotch recipe inn tamil)
#walnutவால்நட் முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது இந்த காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அதிகமாக முடி உதிர்கிறது முடி உதிர்வை கட்டுப்படுத்த வால்நட் சாப்பிடுவது மிகவும் நல்லது.வால்நட் தனியாக சாப்பிடும் பொழுது ஆயில் வாசனையுடன் அவ்வளவு ருசியாக இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் .ஆகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் நாம் சமைத்து தர வேண்டும் வால் நட் வெண்ணை பேரிச்சை சேர்த்து லட்டுகளாக பிடிக்க சுவை அலாதியாக இருக்கும் எனவே இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
-
More Recipes
கமெண்ட் (12)