ஜாங்கிரி (jangri recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#பொங்கல் ரெசிப்பீஸ்

ஜாங்கிரி (jangri recipe in Tamil)

#பொங்கல் ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் உளுந்து
  2. 3/4 கப் சர்க்கரை
  3. 2ஏலக்காய்
  4. 1 ஸ்பூன் அரிசி மாவு
  5. 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  6. சிறிதளவுசிகப்பு கேசரி கலர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உளுந்தை 1/2 மணிநேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்..

  2. 2

    பிறகு அதில் சிறிது கலர், அரிசி மாவு, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..

  3. 3

    சர்க்கரையையும் சிறிது தண்ணீரையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்... அதில் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.. இது பாகு இறுகாமல் பார்த்துக் கொள்ளும்

  4. 4

    அகலமான கடாயில் எண்ணெயை சூடாக்கி கொள்ளவும்

  5. 5

    ஒரு ஜிப்லாக் கவரில் மாவை ஊற்றி அதன் முனையை லேசாக வெட்டி எண்ணெயில் முதலில் இரண்டு பெரிய வட்டமாகவும் பிறகு சிறிய அளவிலான வட்டமாகவும் பிழிந்து பொரித்து எடுத்து பாகில் பத்து நிமிடம் ஊற வைத்து எடுத்து பரிமாறவும்...

  6. 6

    இப்போது சுவையான ஜாங்கிரி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes