செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கிலோ கத்தரிக்காய் நீளமாக வெட்டியது
  2. 2தக்காளி பொடியாக நறுக்கியது
  3. 10 பல் பூண்டு தட்டியது
  4. 2 பெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது
  5. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், சாம்பார் தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1/2 கப்பு எண்ணெய்
  9. 1 ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
  10. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் கத்தரிக்காய் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள் மஞ்சள் தூள், சாம்பார் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிய தீயில் வைத்து வேகவிடவும் கரண்டியால் கலக்க வேண்டாம் வாணலியில் குலுக்கி குலுக்கி கத்தரிக்காய் வேக விடவும் அப்போது தான் கத்தரிக்காய் குழையாமல் இருக்கும்

  4. 4

    சுவையான கத்தரிக்காய் பிரட்டல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes