ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)

செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி புழுங்கல் அரிசி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு துவரம்பருப்பு பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று அல்லது நான்கு முறை கழுவி தண்ணீரை வடிகட்டி பின் மீண்டும் நல்ல தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் ஒரு முழு பெரிய தேங்காயை துருவி கொள்ளவும்
- 2
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்
- 3
பின் ஊறவைத்த அரிசி பருப்பு கலவை உடன் இடித்த ஏலக்காய் தேங்காய் துருவல் சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும் தண்ணீர் பதிலாக வெல்ல கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் இதை ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் வரை மூடி வைக்கவும்
- 4
பின் நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து மெல்லிய தீயில் சிவக்க வறுக்கவும்
- 5
வறுத்த முந்திரியை மாவுடன் சேர்க்கவும் பின் அதே நெய்யில் திராட்சையை வறுத்து சேர்க்கவும்
- 6
பின் அதே நெய்யில் தேங்காய் துண்டுகளை வறுத்து கொட்டி மாவை நன்றாக கலந்து கொள்ளவும்
- 7
பின் குழியான வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி மெல்லிய தீயில் மாவை சின்ன கரண்டியால் எடுத்து மெதுவாக தனித்து ஊற்றவும்
- 8
ஊற்றியதும் எதுவும் கரண்டி கொண்டு கிளற வேண்டாம் அதுவே அழகாக மேலெழும்பி வரும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் மேலெழும்பி வந்ததும் மெதுவாக திருப்பி விடவும்
- 9
இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும் இது பருப்பு சேர்த்து இருப்பதால் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் எண்ணெயில் இருந்து எடுத்ததும் போணாடா மாதிரி இருக்கும் கரண்டி அல்லது கிண்ணம் வைத்து சூடாக இருக்கும் போதே அழுத்தி எண்ணெய் எடுத்து விடவும் வடிவமும் அழகாக கிடைக்கும் உள்ளே ஒவ்வொரு வாய்க்கும் முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகள் கிடைக்கும் போது மிகவும் நன்றாக இருக்கும்
- 10
சுவையான ஆரோக்கியமான செட்டிநாடு ஸ்பெஷல் ஐந்தரிசி பணியாரம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர். cook with viji -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
அரிசி அல்வா
கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
5பருப்பு பணியாரம் (5 Paruppu paniyaram recipe in tamil)
#jan1 இந்தப்பணியார மாவை இனிப்பு ஆடையாகவும் செய்து சாப்பிடலாம் ரெடிமேட் ஆக தயாரித்து வைத்துக் கொண்டு தேவையான போது ஊற்றலாம் Chitra Kumar -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
-
உளுந்தப் பருப்பு சோறு (black gram rice recipe in Tamil)
#vn இது பூப்படைந்த பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள்.. மிகவும் சத்தானதும் கூட... எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த உணவை சமைப்போம்.. Muniswari G -
More Recipes
கமெண்ட் (2)