அரிசி அல்வா

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது.

அரிசி அல்வா

கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
12 நபருக்கு
  1. 1/2 கப்பச்சரிசி / தோசா அரிசி / நார்மல் அரிசி
  2. 1/2 கப்துருவிய தேங்காய்
  3. 3/4 கப்வெல்லம்(பொடியாக)
  4. 5-6 மேஜைக்கரண்டிநெய்
  5. 1 தேக்கரண்டிஏலக்காய் பவுடர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    தண்ணீரை வடித்து விட்டு தேங்காய் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்(தேவைப்பட்டால் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கலாம்).மாவு திக்காக இருக்க வேண்டும்(நீர் தோசை மாதிரி)

  3. 3

    ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி அதில் வெல்லம் 1 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்(குறைந்த தீயில் வைத்து)

  4. 4

    பிறகு அதில் அரிசி-தேங்காய் பேஸ்டை சேர்த்து பாகில் கொதிக்க விடவும்.கொதி அடங்கும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

  5. 5

    தி்க்கான கலவையாக சுருண்டு வந்ததும்,சிறிது நெய்,ஏலக்காய் பவுடர் சேர்த்து கிளறவும்.(குறைந்த தீயில் வைக்கவும்)

  6. 6

    தி்க்கான கலவையாக வந்ததும் எடுக்கக் கூடாது.சிறிது நேரம் கழித்து அல்வா கடாயை விட்டு பிரிந்து வரும்.அந்த நிலையில் அடுப்பை அணைத்துவிடவும்.

  7. 7

    ஒரு நெய் தடவிய தட்டில் அல்வாவை கொட்டி சமப்படுத்தவும்.

  8. 8

    ஒரு ஸ்பூன் நெய் எடுத்து அல்வா மீது தடவவும்.

  9. 9

    குளிர்ச்சியானதும் பெரிய துண்டுகள் போட்டு பரிமாறவும்.

  10. 10

    பிரிட்ஜில் சேமித்து வைத்தால் 3 நாட்கள் கெடாமல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes