மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)

#pizzamini
குழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை.
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzamini
குழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்,வெதுவெதுப்பான (கை பொறுக்கும் சூடு இருக்க வேண்டும்)பாலில்,சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலந்து,15 நிமிடங்கள் மூடி போட்டு,ஈஸ்ட் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில்,மாவு மற்றும் உப்பு சேர்த்து சலித்துக் கொண்டு,அதில் ஈஸ்ட் கலவையை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 3
மாவை,பிசைவதற்கு வசதியான இடத்திற்கு மாற்றி,பின் ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக இழுத்து,15 நிமிடங்களுக்கு பிசைய வேண்டும்.
- 4
பின் 1ஸ்பூன் அளவு எண்ணெயை பாத்திரத்தின் உள் மற்றும் மாவின் மேல் தடவி 1மணி நேரம் வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும்.
- 5
1மணி நேரம் கழித்து,மாவு நன்றாக உப்பி வந்திருக்கும்.மாவை எடுத்து மேலும் 5 நிமிடங்களுக்கு பிசையவும்.
- 6
பின் சிறிதளவு மாவை தூவி,சப்பாத்திக்கு விரிப்பது போல் விரித்து சிறு சிறு வட்டங்களாக வெட்ட வேண்டும்.
- 7
வெட்டிய ஒவ்வொரு வட்டங்களின் ஓரங்களைச் சுற்றியும், அழுத்தி விட்டு நடுவில் போர்க்-ஆல் குத்தி வட்டங்கள் மேல் பிட்சா சாஸ் தடவ வேண்டும்.
- 8
பின் வெங்காயம்,தக்காளி, குடைமிளகாய், நறுக்கி சேர்க்க வேண்டும்.பின்,சீஸ் துருவல் சேர்க்கவும்.கடைசியாக சில்லி ஃபிளேக்ஸ், ஒரிகனோ தூவ வேண்டும்.
- 9
பின் அடுப்பில் கடாயை வைத்து மண் அல்லது உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடங்கள் சூடு செய்து,பின் நாம் செய்து வைத்தவற்றை தட்டின் மேல் வைத்து ஸ்டாண்டில் வைக்கவும்.
- 10
மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
இது குழந்தைகள் மட்டுமல்ல,பிட்சா பிடிக்காத பெரியவர்களும் சாப்பிடும் சுவையில் இருக்கும். - 11
அவ்வளவுதான். சுவையான,மினி,தவா பிட்சா ரெடி. தக்காளி சாஸ் வைத்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
-
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
#streetfood Vimala christy -
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
-
PIZZA SAUCE🍅
#COLOURS1 வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்..... Kalaiselvi -
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)
#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12) Soulful recipes (Shamini Arun) -
தவா சீஸ் பிரட் சாண்ட் விச்/ tawa cheese bread sanwich recipe in tamil
# milk - சுவைமிக்க எளிதில் செய்ய கூடிய குழைந்தைகள் விரும்பும் சுவையில் செய்த சீஸ் பிரெட் சாண்ட்விச்.. Nalini Shankar -
-
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
-
-
சீஸி தவா பிஸ்ஸா (Cheese thawa pizza recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் சாஸ் வார்த்தை கண்டுபிடித்தேன் இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் pickle வார்த்தை கண்டுபிடித்தேன் இரண்டையும் உபயோகித்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறேன். இந்த ரெசிபி செய்வதற்கு சீஸ் தேவையில்லை பீசா சாஸ் தேவையில்லை . மிகவும் சுலபமான ரெசிப்பி வாருங்கள் இப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#goldenapron3 #arusuvai5 #goldenapron3 22 &23 week recipe Akzara's healthy kitchen -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala
More Recipes
கமெண்ட் (3)