சப்பாத்தி சைடிஷ்,தக்காளி வெங்காய தொக்கு(onion tomato thokku recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
2பேர்
  1. 5தக்காளி
  2. 2வெங்காயம்
  3. 1.5ஸ்பூன் மல்லி தூள்
  4. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்,காரத்திற்கேற்ப
  5. 1/2ஸ்பூன் சீரக தூள்
  6. 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 100ml தண்ணீர்
  9. தாளிக்க:
  10. 3ஸ்பூன் கடலைஎண்ணெய்
  11. 1/2ஸ்பூன் சீரகம்
  12. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடிதாக அரிந்து கொள்ள வேண்டும்.

    தக்காளிக்குப் பாதி அளவு வெங்காயம் சேர்க்கவில்லையெனில், தொக்கு புளிக்கும்.

  2. 2

    வாணலியில்,எண்ணெய் ஊற்றி,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து,வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்,நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும்.

  4. 4

    பின் மல்லி தூள்,மிளகாய் தூள்,சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். அத்துடன் 100ml அளவுக்கு தண்ணீர் சேர்த்து தக்காளியை மூடி போட்டு வேக விடவும்.

  5. 5

    அடிக்கடி கிளறி விடவும்,தண்ணீர் வற்றி, தக்காளி மசிந்ததும் கரம் மசாலா சேர்கவும்.பின் இன்னும் சுருள வதக்கி,உப்பு சரி பார்த்து இறக்கவும்.

  6. 6

    அவ்வளவுதான். சுவையான தக்காளி வெங்காய தொக்கு ரெடி.

    இது சப்பாத்திக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes