எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.

இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர்.

எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)

இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.

இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
7பேர்
  1. 1கப் எள்
  2. 1கப் வெல்லம்
  3. 1/2கப் தண்ணீர்
  4. 1டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    நான் எள்,இரண்டு நிறங்களிலும் எடுத்துள்ளேன்.

    எள்ளை நன்றாகக் கழுவி வெறும் வாணலியில் இட்டு,அது ஈரப்பதம் காய்ந்து, வெடிக்கும் வரை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    நாம் அதிக அளவில் எள் எடுத்திருப்பதால் நன்றாக வெடிக்கும் என்று காத்திருந்தால் கரிந்து விடும்.வெடிக்க ஆரம்பித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி,மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீக்கும் அதிகமாக வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    பாகு கெட்டியாக மாறியதும்,தீயை சிம்மில் வைத்து சிறிதளவு பாகை நீரில் இட்டு பார்த்தால் உருட்டி உடையும் அளவுக்கு இருக்க வேண்டும்.

  5. 5

    இந்த சமயத்தில் நெய்,உப்பு மாற்றும் வறுத்த எள்ளை பாகில் சேர்த்து ஒன்றோடு ஒன்றாக சேரும் படி கலந்து விடவும்.

  6. 6

    கலந்தும்,அடுப்பை அணைத்து,பட்டர் பேப்பரில் கலவையைக் கொட்டி,சூடாக இருக்கும் போதே சப்பாத்தி ரோலரில் நெய் அல்லது எண்ணெய்(தாராளமாக சேர்த்தால் தான் கைகளிலும்,ரோலரில் ஒட்டாது)தடவி சமப்படுத்த மற்றும் ஓரங்களை ட்ரிம் செய்ய வேண்டும்.

  7. 7

    இப்பொழுது கத்தியால் துண்டுகள் போட்டு,ஆறியதும் எடுத்து பரிமாறலாம். நாம் கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருக்கும்.

    காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 4-5நாட்கள் வரையிலும் நன்றாக இருக்கும்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான,எள்ளு மிட்டாய் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Top Search in

Similar Recipes