புளி மிட்டாய் (Puli mittai recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#GA4 #Tamarind #Week1 இந்த வகை மிட்டாய் சின்ன சிறு கட்டில் கடை,பெட்டி கடைகளில் விற்கப்படும்.இவை இனிப்பு,துவர்ப்பு, உவர்ப்பு,கார்ப்பு,மற்றும் புளிப்பு சுவை உடையது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.ஆனால் இப்போது எல்லாம் எளிதில் கிடைப்பதில்லை.அதை நாம் வீட்டில் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் வாங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 போர்
  1. 150 கிராம்புளி
  2. 150 கிராம்வெல்லம்
  3. 1/2 ஸ்பூன்வர மிளகாய் தூள்
  4. 1/2 ஸ்பூன்சீரகதூள்
  5. 1/2 ஸ்பூன்மேகி மசாலாவில் உள்ள பொடி
  6. 2 சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 150 கிராம் புளியை தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஒரு மணி நேரம் ஊறிய பிறகு அதை நன்கு கரைத்து அதில் உள்ள சக்கையை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு 150 கிராம் வெல்லத்தை ஒரு கடாயில் போட்டு அதில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்

  3. 3

    வெல்லம் கரைந்ததும் அதில் புளி கரைசலை சேர்த்து கிளறி விடவும்.புளியில் உள்ள தண்ணீர் வற்றி வரும் வரை கிளறி விட வேண்டும்..

  4. 4

    ஓர் அளவிற்கு தண்ணீர் வற்றியதும் அதில் மிளகாய் தூள்,சீரக தூள், சாட் மசாலா அல்லது மேகி மசாலாவில் உள்ள பொடி, உப்பு சேர்த்து ஒரு 10 நிமிடம் கிளறி விடவும்

  5. 5

    கிளறிய பிறகு முக்கால் பதத்திற்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து 5 நிமிடங்கள் ஆறவிடவும். பின்னர் தட்டிற்கு மாற்றி சிறிதளவு எடுத்து ஸ்பூனில் வைக்கவும்

  6. 6

    பின்னர் பாலிதீன் கவரை சிறிதளவு கிழித்து ஸ்பூனை சுற்றிலும் சுற்றவும் படத்தில் காட்டியவாறு.

  7. 7

    அவ்ளோ தான் சுலபமான 80's 90's கிட்ஸ் புளி மிட்டாய் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes