* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#queen1
இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)

#queen1
இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
4 பேர்
  1. 3/4 கப்இட்லி புழுங்கலரிசி
  2. 3/4 கப்பச்சரிசி
  3. 3/4 கப்முழு உளுந்து
  4. 1 ஸ்பூன்வெந்தயம்
  5. 1 ஸ்பூன்மிளகு
  6. 1 ஸ்பூன்சீரகம்
  7. 1 டீ ஸ்பூன்தாளிக்க:-கடுகு
  8. 1 டீ ஸ்பூன்க.பருப்பு
  9. 1 டீ ஸ்பூன்உ.பருப்பு
  10. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  11. 2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  12. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  13. 12முந்திரி
  14. 1 பெரிய துண்டுஇஞ்சி
  15. ருசிக்குகல் உப்பு
  16. வறுத்த முந்திரிஅலங்கரிக்க:-

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    புழுங்கலரிசி, பச்சரிசி,வெந்தயம்.உளுந்தை ஒரு பாத்திரத்தில் போடவும்.

  2. 2

    பிறகு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து மிக்ஸி ஜாரில், அரிசியுடன், உப்பு போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து, 8 மணி நேரம் மாவை புளிக்க வைக்கவும்.

  3. 3

    சிறிய மிக்ஸி ஜாரில், மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும்.

  4. 4

    இஞ்சியையும் அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    கடாயில், 1 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் காய்ந்ததும்,முந்திரியை சிவக்க வறுத்து தட்டில் வைத்து ஆற விடவும்.

  6. 6

    மீதமுள்ள எண்ணெயில், கடுகு, க.பருப்பு, உ.பருப்பை சிவக்க வறுக்கவும், பொடித்த மிளகு, சீரக, இஞ்சியை வதக்கவும்.

  7. 7

    புளித்த மாவில், நல்லெண்ணெய்,வதக்கினதை போடவும்.பின் வறுத்த முந்திரியை போட்டு மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.

  8. 8

    குக்கரில் சிறிது தண்ணீர் காய்ந்ததும்,அடுப்பை மீடியத்தில் வைத்து, டம்ளர்களில், ந.எண்ணெய் தடவி, 3/4 பங்கு மாவை ஊற்றி, மேலே வறுத்த முந்திரியை வைக்வும்.

  9. 9

    குக்கரை மூடி 20 நிமிடம் வேகவிட்டு, குச்சியில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  10. 10

    ஆறினதும், ஸ்பூனால் எடுத்து தட்டில் வைத்து,* கட்* செய்யவும்.இப்போது, சுவையான,,* காஞ்சீபுரம் இட்லி* தயார். செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes