தேவையான பொருட்கள்

30 mns
15 ns
  1. 1 கப் இட்லி அரிசி
  2. 1கப் மாவு பச்சை அரிசி
  3. 1கப் உளுந்து
  4. தாளிக்க
  5. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  6. 1/2டீ ஸ்பூன் கடுகு
  7. 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  8. 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  9. 1/2 டீஸ்பூன் சுக்கு தூள்
  10. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள் சீரகத்தூள் தலா
  11. அரை டீஸ்பூன் இஞ்சி துருவியது
  12. 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  13. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  14. 2 சிட்டிகை சோடா உப்பு (சமையல்)
  15. சிறிதளவுகருவேப்பிலை
  16. அரை கப் தயிர்
  17. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 mns
  1. 1

    ஒரு கப் உளுத்தம்பருப்பு, ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் மாவு பச்சை அரிசி மூன்றையும் நன்றாக கழுவி ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் ஏழு அல்லது எட்டு மணி அளவில் மூன்றையும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை நன்கு கலந்துவிட்டு எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

  2. 2

    மாவு புளித்த பிறகு தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை முந்திரிப்பருப்பு, அனைத்தையும் தாளித்து மாவில் கொட்டவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், சுக்கு தூள், மூன்றையும் சேர்த்துக் கொள்ளவும். துருவிய தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். நன்றாக அனைத்தையும் கரண்டி கொண்டு போட்டு கலந்து விடவும்.

  3. 3

    நாவை நன்றாக கலந்த பின் கடைசியாக இரண்டு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ளவும். இட்லி ஊற்றும் பதத்திற்கு தேவை என்றால் நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். சாதாரண இட்லி மாவு பதத்திற்கு கரைக்கக் கூடாது. கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். டம்ளர் அல்லது கப்புகளில் எண்ணெயைத் தடவி கலந்த மாவை ஊற்ற முக்கால் அளவிற்கு மாவை ஊற்றவும்.

  4. 4

    இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் குறைந்த பட்சம் பத்து நிமிடத்தில் இருந்து 12 நிமிடம் வரை வேக விடவும். மீடியமான தீயில் வேக விடவும்.பிறகு வெந்துவிட்டதா என்று செக் செய்து விட்டு நன்கு ஆறவிட்டு கத்திக்கொண்டு கீனி இட்லியை தனியாக எடுக்கவும்.

  5. 5

    இட்லியை தேவையான அளவில் கட் செய்து புளி சட்னி சட்னி சாம்பார் இவற்றுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes