காஞ்சிபுரம் இட்லி
#Vattaram
#week2
#kancheepuram,Chengalput
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பச்சரிசியுடன், 1 கப் உளுந்து பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். மறுநாள் அதனுடன் 1 கப் புளிப்பு இல்லாத கெட்டி தயிர், ஊற வைத்த 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, 1டீஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் மிளகு, 1/2 டீஸ்பூன் சுக்குத்தூள்,6 உடைத்த முந்திரி 1 சிட்டிகை சமையல் சோடா, 2 டீஸ்பூன் நெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எடுத்து வைக்கவும். முந்திரிப்பருப்பை தவிர்த்து அனைத்தையும் மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 2
1 கப் கெட்டி தயிர் சேர்த்து கலக்கி விடவும். கை கரண்டியில் 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் ஆயில் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 3
1 கிண்ணத்தில் நெய் தடவி, நன்கு கலக்கி வைத்த மாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவிடவும்.
- 4
வெந்தவுடன் நடுவில் ஒரு கத்தியை கொண்டு குத்தி பார்க்கவும். மாவு கத்தியில் ஒட்டாமல் வந்தால் இட்லி வெந்த விட்டது. ஆறியவுடன் ஒரு கத்தி வைத்து பீஸ் போடவும்.
- 5
ஒரே ஒரு பீஸை முதலில் எடுத்தால் மற்ற பீஸ்கள் சுலபமாக வந்துவிடும். பொட்டுக்கடலை சட்னி வைத்த பரிமாறினேன். சாதாரண இட்லியை சுடுவது போல், காஞ்சிபுரம் இட்லியை இட்லி தட்டிலும் சுடலாம்.
- 6
சுவையான சுலபமான காஞ்சிபுரம் இட்லி ரெடி😋😋 மிகவும் மிருதுவான சுவையான காஞ்சிபுரம் இட்லி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
சாதாரணமாக மாங்காயில் ஊறுகாய் போடுவார்கள் ஆனால் நான் செய்திருக்கும் மாங்காய் பருப்பை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி Jegadhambal N -
-
-
More Recipes
கமெண்ட் (5)