காளான் 65(mushroom 65 recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

காளான் 65(mushroom 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 400 கிராம் மொட்டு காளான்
  2. தேவையானஅளவு எண்ணெய் பொரிப்பதற்கு
  3. மசாலாவிற்கு தேவையானவை:
  4. 1/2 கப் மைதா மாவு
  5. 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  6. 2 மேஜை கரண்டி அரிசி மாவு
  7. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  8. 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  9. 1 சிட்டிகை சிவப்பு கலர்
  10. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  11. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  12. தேவையானஅளவு உப்பு
  13. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    காளானை ஐஸ் கட்டி தண்ணீரில் சேர்த்து சுத்தமாக கழுவி வடித்து இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    மசாலாவிற்கு குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும் இதில் வெட்டி வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊறவிடவும்.

  3. 3

    பொரிப்பதற்கு எண்ணெய் நன்றாக சூடு ஏறியதும் காளான் துண்டுகளை ஒவ்வொன்றாக சூடான எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான காளான் 65 டன் வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Farheen Begam
Farheen Begam @Farheenbegam
அன்று

Top Search in

Similar Recipes