கோவா ஜாமூன்(mawa gulab jamun recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 நபர்கள்
  1. 200கிராம் ஸ்வீட்லெஸ் கோவா
  2. 100கிராம் மைதா
  3. 2பின்ச் சமையல் சோடா
  4. 1டீஸ்பூன் நெய்
  5. தேவையானஅளவு பால்
  6. தேவையான அளவுபொரிக்கத் எண்ணெய் அல்லது நெய்
  7. 600 கிராம் சர்க்கரை
  8. 750 மிலி தண்ணீர்
  9. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.

  2. 2

    கோவாவை நன்கு தேய்த்து சாஃப்ட் ஆக்கவும்.

  3. 3

    மைதாவுடன் சமையல் சோடா, நெய் சேர்த்து நன்கு பிசறி இதை கோவாவுடன் சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைந்து உருட்டி 10நிமிடம் மூடி வைக்கவும்.

  4. 4

    பின்னர் தேவையான ஷேப்பில் உருட்டி வைக்கவும்.

  5. 5

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் உருண்டைகளை பத்து, பத்தாகபோட்டு பொரித்து பாகில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் ஊறிய பின் குண்டு குண்டு குலாப் ஜாமூன் ரெடி. ஐஸ் கிரீம் உடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes