முட்டை வறுவல்(egg fry recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

முட்டை வறுவல்(egg fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
3பேர்
  1. 5-7முட்டை
  2. 7-10பல் பூண்டு
  3. சிறிதளவுகறிவேப்பிலை
  4. 2ஸ்பூன் மல்லித்தூள்
  5. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. 3/4ஸ்பூன் மிளகு தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 5ஸ்பூன் கடலைஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பூண்டை நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    மசாலாக்களை உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    முட்டையை வேக வைத்து ஓடு நீக்கி இரண்டாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    வாணலியில் 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,பூண்டு சேர்த்து நன்றாக பொரிந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    பின் எடுத்து வைத்துள்ள மசாலாவில் பாதி அளவு சேர்த்து கலந்து,உடனேயே முட்டை துண்டுகளை சேர்க்க வேண்டும்.இல்லையெனில் மசாலா கரிந்துவிடும்.

  5. 5

    பின் மேலே சிறிதளவு மசாலா தூவி,1ஸ்பூன் எண்ணெய் சுற்றி ஊற்ற வேண்டும்.முட்டையின் கீழ் பாகம் மசாவில் ஒட்டி பிடித்து 'டப் டப்' சத்தம் வரும்போது திருப்பி போட வேண்டும்.

  6. 6

    பின்,மறுபடியும் மசாலா மற்றும் 1ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். சத்தம் வரும் வரை காத்திருக்கவும்.

  7. 7

    பின்,மீதியுள்ள மசாலாவைத் தூவி முட்டையை பிரட்டி விட்டு,2நிமிடங்கள் கழித்து இறக்கி விடலாம்.

  8. 8

    அவ்வளவுதான்.சுவையான,காரமான எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடிய முட்டை வறுவல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes