சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)

உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
ஐந்து பேர்
  1. 250 கிராம்உளுந்து
  2. ஒரு சிறிய துண்டுஇஞ்சி
  3. ஒன்றுபெரிய வெங்காயம்
  4. கறிவேப்பிலை
  5. கொத்தமல்லி இலை
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் அதை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    பின்னர் ஒரு வாணலியில் கடலை எண்ணெய் அல்லது சன் ஃபிளவர் எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கி கொள்ளவேண்டும்.

  4. 4

    பின்னர் அரைத்து வைத்த மாவில் வெங்காயம் இஞ்சி நறுக்கியது கறிவேப்பிலை மல்லி இலை சிறிது சிறிதாக நறுக்கி போட வேண்டும்.

  5. 5

    பின்னர் இக் கலவையில் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். உளுந்த வடை அழகாக வருவதற்கு கம்பியில் ஆன காபி வடிகட்டி எடுத்துக் கொண்டு அதன் பின் பக்கம் தண்ணியை வைத்து தடவிக் கொள்ள வேண்டும். அதில் மாவை வைத்து தட்டி போட்டால் அழகாக வடை வரும்.

  6. 6

    பின்னர் தட்டிய மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  7. 7

    சுவையான சத்தான உளுந்த வடை ரெடி.இதை வெண்பொங்கல் உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Lathamithra
Lathamithra @lathasenthil
அன்று
Srivilliputhur

Similar Recipes