ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ஆலு பராத்தா (Aloo Paratha recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  1. 4உருளை்கிழங்குகள
  2. 1 வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. 1டீஸ்பூன் இஞ்சி துருவல்
  5. கறிவேப்பிலை
  6. மல்லி இலை
  7. 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/4 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 2கப் கோதுமை மாவு
  12. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    உருளைக் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்.

  2. 2

    வெந்த உருளைக் கிழங்கை நன்கு மசித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், மல்லி,கறிவேப்பிலை,இஞ்சி,உப்பு, மசாலா பொருட்கள் எல்லாம் சேர்த்து நன்கு பிசையவும்.

  3. 3

    பின்னர் கோதுமை மாவு, தண்ணீர், உப்பு,எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மாவு பிசைந்து தயாராக வைத்து விடவும்.

  4. 4

    பின்னர் சப்பாத்தி மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து, பரத்தி உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து மூடி பராத்தாவை கொஞ்சம் மெலிதாக தேய்க்கவும்.

  5. 5

    அதன் பின் தோசை தவாவை சூடு செய்து தயாராக உள்ள ஆலு பராத்தாவை இருபுறமும் திருப்பி போட்டு நெய் தடவி சுட்டி எடுக்கவும்.

  6. 6

    இப்போது மிகவும் சுவையான, மிருதுவான ஆலு பராத்தா சுவைக்கத்தயார்.

  7. 7

    இத்துடன் கொத்சு அல்லது கிரேவி, தயிர் பச்சிடி போன்ற ஏதாவது வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes