இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#newyeartamil

அரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது.

இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

#newyeartamil

அரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
4 பேர்கள்
  1. 1 கப்துவரம்பருப்பு-
  2. அரைஸ்பூன்மஞ்சள் பொடி-
  3. சிறிதுவெந்தயம் -
  4. கொஞ்சம்பெருங்காயம் -
  5. 2தக்காளி-
  6. 5சின்னவெங்காயம்-
  7. 6 பல்பூண்டு-
  8. 1பெரியவெங்காயம்-
  9. 3கத்தரிக்காய் -
  10. 3பலாக்கொட்டை-
  11. 1கொத்துகருவேப்பிலை -
  12. சிறிதளவுமல்லிதழை-
  13. நெல்லிக்காய்அளவுபுளி -
  14. தேவைக்குஉப்பு-
  15. தேவைக்குதண்ணீர்-
  16. தேவைக்குஎண்ணெய்-
  17. 1ஸ்பூன்அரைத்த சாம்பார்மசாலா-
  18. தாளிக்க:
  19. கால்ஸ்பூன்கடுகு -
  20. கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு -
  21. 1பச்சைமிளகாய் -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் துவரம்பருப்பை சுத்தம் பண்ணி, தேவையானதண்ணீர்விட்டுமஞ்சள்பொடி போட்டு வேகவைக்கவும்.

  2. 2

    கொஞ்சம் வெந்தயம், பெருங்காயம் சேர்த்து லேசாக கொதித்ததும் குக்கரை மூடவும்.

  3. 3

    குக்கரை மூடியதும் 2 விசில்வந்ததும் சிம்மில் 3நிமிடங்கள் வைக்கவும்.இப்போது காய்கறிகள், வெங்காயம் ரெடி பண்ணிக்கொள்ளவும்.அரைத்த சாம்பார் மசாலா எடுத்துவைக்கவும்.

  4. 4

    புளியை வெந்நீரில் நனையப்போடவும்.பின்ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய்ஊற்றவும்.

  5. 5

    அதில் கடுகு,உளுந்தம்பருப்பு,வெங்காயம் பச்சைமிளகாய்,கருவேப்பிலைபோட்டு தாளிக்கவும்.பின் காய்களைப்போடவும்.பின் அரைத்த மிளகாய்,உப்புசேர்க்கவும்.

  6. 6

    பின் வடிகட்டியபுளிக் கரைசல் சேர்க்கவும்.பின் லேசாககொதிக்க விடவும்.

  7. 7

    பின் கொதித்த காய்கறிகலவையைபருப்பில் சேர்க்கவும்.குக்கரை 2நிமிடங்கள் மூடி காய்கள் வேகவிடவும்.

  8. 8

    பின்குக்கரை திறந்து மல்லித்தழை போடவும். சாம்பாரை வேறு பாத்திரத்தில் மாற்றிவிடவும்.மேலே லேசாக மல்லித்தூவி இட்லி,தோசைக்கு. பரிமாறவும்.இட்லி சாம்பார்ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes