கேரளாஸ்டைல்பருப்பு சுரைக்காய்(kerala style koottu recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#go

கேரளாஸ்டைல்பருப்பு சுரைக்காய்(kerala style koottu recipe in tamil)

#go

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
4 பேர்கள்
  1. 1சின்னசுரைக்காய் -
  2. 1 கப்துவரம்பருப்பு-
  3. அரைகப்தேங்காய்சில்கட் பண்ணியது-
  4. 1 ஸ்பூன்சீரகம் -
  5. 3பச்சைமிளகாய்-
  6. தேவைக்குஉப்பு -
  7. தேவைக்குஎண்ணெய்-
  8. அரைஸ்பூன்கடுகு-
  9. அரைஸ்பூன்உளுந்தம்பருப்பு -
  10. 1வர மிளகாய் -
  11. 1 கொத்துகருவேப்பிலை-
  12. கால்ஸ்பூன்பெருங்காயம்-
  13. கால்ஸ்பூன்வெந்தயம்-
  14. கால்ஸ்பூன்மஞ்சள்தூள்-
  15. 4சின்னவெங்காயம்-
  16. 5 பல்பூண்டு-
  17. அரைஸ்பூன்குழம்புமிளகாய்பொடி -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்துவரம்பருப்பைசுத்தம்செய்து அடுப்பில் குக்கர் வைத்து பருப்புக்கு தேவையான தண்ணீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து பருப்பை அதில் போடவும்.

  2. 2

    சுரைக்காயை கட் பண்ணிக் கொள்ளவும்.

  3. 3

    சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் கட் பண்ணி சுரைக்காயுடன் சேர்க்கவும்.

  4. 4

    பெருங்காயப்பொடி சேர்த்து குக்கரை மூடி வேகவிடவும்.மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சைமிளகாய்- 2சேர்த்து அரைக்க எடுத்துவைக்கவும்.

  5. 5

    உப்பு சேர்த்து அரைக்கவும்.குக்கரில் பருப்பு, சுரைக்காய் 3சத்தம் வந்ததும் 3 நிமிடங்கள் கழித்து திறக்கவும்.பருப்பு பூப்போல்மலர்ந்துஇருக்கும்.சுரைக்காயும் நன்கு வெந்துஇருக்கும்.இப்போது அரைத்ததை குக்கரில் பருப்புடன் சேர்க்கவும்.

  6. 6

    மீண்டும் குக்கரை மூடி அடுப்பில் 2நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

  7. 7

    கடுகு,உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும். இதில் குக்கரில் உள்ள பருப்பு சுரைக்காயைச்சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

  8. 8

    பருப்பு சுரைக்காய் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.சப்பாத்தி, தோசைக்கும் நன்றாகஇருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes