தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது

தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)

தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. 200 கிராம்இட்லி அரிசி
  2. 50 கிராம்உளுந்தம் பருப்பு
  3. சிறிதளவுவெந்தயம்
  4. 4 சிறியதக்காளி
  5. தேவைக்கேற்பஎண்ணெய்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. சிறிதளவுகருவேப்பிலை
  8. சிறிதளவுமல்லி இலை
  9. அரை டீஸ்பூன்சீரகம்
  10. சிறிதளவுபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரிசியும் உளுந்து வெந்தயம் இவற்றை நன்கு கழுவி மூன்று மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்

  2. 2

    நன்கு ஊறியதும் மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்

  3. 3

    பின்னர் 4 தக்காளியையும் துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைக்கவும் அரைத்த தக்காளி கலவையை மாவில் சேர்க்கவும்

  4. 4

    இந்த மாவு தக்காளி கலவையில் சீரகம் கருவேப்பிலை உப்பு பெருங்காயத் தூள் மல்லி இலை அனைத்தும் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்கு கலக்கவும்

  5. 5

    அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி மாவுக் கலவையை நைசாக தோசையாக ஊற்றவும் மேலே சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிடவும்

  6. 6

    இப்பொழுது தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையான தக்காளி தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes