கஸ்டர்டு மில்க்க்ஷேக்(custard milk shake recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

இது செய்வதும் சுலபம்.சுவையானதும் கூட.குட்டீஸ் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்புவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2பேர்
  1. 500ml பால்
  2. 2டேபிள் ஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
  3. 1/8கப் நுட்ஸ்
  4. 1டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகள்
  5. தேவையானஅளவு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சப்ஜா விதைகளை சிறிதளவு நீரில் ஊற வைக்கவும்.மற்ற வேலைகள் செய்து முடிப்பதற்குள் ஊறி விடும்.

  2. 2

    முதலில்,அடுப்பில் பால் வைத்து கொதிக்க விடவும்.பால் சூடாக ஆரம்பித்ததும்,சிறிதளவு பால் எடுத்து கஸ்டர்டு பவுடரை கட்டிகளிலாமல் கரைத்துக் கொள்ளவும்.
    கரைப்பதால்,பாலில் சேர்க்கும் பொழுது,உடனே கரைந்து விடும்.

  3. 3

    பால் கொதித்ததும்,தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.கரைந்ததும் கரைத்து வைத்த,கஸ்டர்டு பால் கலவையை சேர்க்கவும்.

  4. 4

    இன்னும் 10 நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாக ஆரம்பிக்கும்.கலரும் மாறும். பார்க்க அழகாகவும்,வாசனையாகவும் இருக்கும்.

  5. 5

    நமக்கு எந்த அளவுக்கு 'திக்'-க்காக வேண்டுமோ அது வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

  6. 6

    இறக்கிய பாலை ஆற வைத்து,பின் அதில் நறுக்கிய நட்ஸ் மற்றும் ஊறிய சப்ஜா விதைகளை சேர்த்து பருகலாம்.

  7. 7

    விரும்பினால் பிரிட்ஜ்-ல் வைத்து குளிர்ந்ததும் பருகலாம்.

  8. 8

    அவ்வளவு தான். சுவையான, குட்டிஸ்க்கு மிகவும் பிடித்தமான கஸ்டர்டு மிலக்க்ஷேக் ரெடி.

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes