பழைய சாதம்(palaiya saadam recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#birthday1
பொதுவாக,பிள்ளைகளுக்கு இட்லி செய்து தந்து,மீதி ஆன சாப்பாட்டை பழைய சாதமாக மாற்றி சாப்பிடுவது தான் அம்மாக்களின் வழக்கம். என் அம்மாவும் அப்படித்தான். ஏன்? என்று கேட்டால்,இது தான் அமிர்தம்.வயிறும் நிரம்பும்,என்பார்..அது உண்மை தானே!

பழைய சாதம்(palaiya saadam recipe in tamil)

#birthday1
பொதுவாக,பிள்ளைகளுக்கு இட்லி செய்து தந்து,மீதி ஆன சாப்பாட்டை பழைய சாதமாக மாற்றி சாப்பிடுவது தான் அம்மாக்களின் வழக்கம். என் அம்மாவும் அப்படித்தான். ஏன்? என்று கேட்டால்,இது தான் அமிர்தம்.வயிறும் நிரம்பும்,என்பார்..அது உண்மை தானே!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

8மணி நேரம்
1நபர்
  1. தேவையானஅளவு மீதியான சாதம்
  2. தேவையானஅளவு உப்பு
  3. 2ஸ்பூன் தயிர்
  4. 1மிளகாய்
  5. 1ஸ்பூன் ஊறுகாய்

சமையல் குறிப்புகள்

8மணி நேரம்
  1. 1

    மீதியான வடித்த சாதத்தில், 2டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடவும்.

  2. 2

    காலையில்,அந்த சாதம் புளித்து பழைய சாதமாக மாறி இருக்கும். சாதத்தை, கைகளால் கசக்கி,பின் அந்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து,உப்பு சேர்த்து பருகலாம்.இதன் பெயர் நீராகாரம்.

  3. 3

    சாதத்தில் உப்பு சேர்த்து சிறிது தயிர் விட்டு மிளகாய் கீறி சேர்த்து,ஊறுகாய் அல்லது வெங்காயம் கடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.

    பழைய மீன் குழம்பு வைத்து சாப்பிட்டால்,இன்னும் அருமையாக இருக்கும்.

  4. 4

    அவ்வளவு தான். வெயிலுக்கு இதமான,உடலுக்கு குளிர்ச்சியான பழைய சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes