மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#birthday2 மாம்பழம்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை..

மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)

#birthday2 மாம்பழம்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12-20 நிமிடங்கள்
தேவைக்கு
  1. 3 நன்கு பழுத்த மாம்பழம்
  2. 1/2 கப் சக்கரை
  3. 1டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

12-20 நிமிடங்கள்
  1. 1

    நன்கு பழுத்த இனிப்பான மாம்பழமாக பாத்து வாங்கவும். அதை தோல் நீக்கி சின்ன துண்டாக வெட்டி மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கவும்.

  2. 2

    ஸ்டவ்வில் வாணலி வைத்து மாம்பழ விழுதை சேர்த்து ஒன்னிரண்டு நிமிடம் வதக்கவும்

  3. 3

    அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக கிண்டவும், சக்கரை கரைந்து கொஞ்சம் கெட்டியானதும் எலுமிச்சை சார் சேர்த்து நன்றாக கை விடாமல் கிளறவும்.

  4. 4

    நன்றாக சேர்ந்து கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.

  5. 5

    நன்கு எல்லாம் சேர்ந்து அல்வா பதம் போல் வந்து கெட்டி ஆனதும் ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைத்து விடவும்..கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் விட்டு பார்த்தால் இளகி கீழே வழியாமல் அப்படியே இருக்கும். அதுதான் பதம்.

  6. 6

    அதை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் மாத்தி விடவும். சூடாக இருக்கும்பொழுது ஒரு மர பலகையின் மேல் கண்ணாடி பாட்டில் வைத்து ஜாம் எடுத்து விடவும். அல்லது ஆறின பிறகு எடுத்து வைத்துக்கவும்.

  7. 7

    அருமையான சுவையில் வீட்டிலேயே தயாரித்த மாம்பழ ஜாம் தயார்.. சப்பாத்தி, பிரெட் எல்லாவற்றுடனும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. தேவையான பொழுது தண்ணீர் கலந்து மாம்பழ ஜூஸ் அல்லது, பால் சேர்த்தால் மாம்பழ மில்க் ஷேக் போலவும் செய்து தரலாம்....3 in 1 மாம்பழ ஜாம் சுவைக்க தயார்...இதை பிரிட்ஜ்ல் வைத்து 3-6மாதம் வரை உபயோகப்படுதலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes