முருங்கைக்காய் உருளைக்கிழங்கு கார குழம்பு(kara kulambu recipe in tamil)

vasanthra
vasanthra @cookingzeal
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  1. 1 முருங்கைக்காய்
  2. 1உருளைக்கிழங்கு
  3. 2 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  4. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1 வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. 4-5 பூண்டு
  8. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  9. 1 டேபிள்ஸ்பூன் வடகம்
  10. தேவையானஅளவு கருவெய்பில்லை
  11. தேவையானஅளவு தண்ணீர்
  12. தேவையானஅளவு புளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் புளி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.10 நிமிடம் கழித்து நன்கு கரைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வடகம், கருவெய்ப்பில்லை போட்டு தாளித்து கொள்ளவும்.

  3. 3

    அதில், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் நன்கு வதகிய பின் அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் அதில் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதகவும்.

  5. 5

    பின் அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  6. 6

    அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    10 - 15 நிமிடம் கொதிக்கவிடவும். சுவையான முருங்கைக்காய் உருளைக்கிழங்கு கார குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes