உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)

உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை கழுவி குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் கால் ஸ்பூன் அளவு மஞ்சள்தூள் மற்றும் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஐந்து விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு அறிந்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். சின்ன வெங்காயம் தோலுரித்து கொள்ளவும். ஒரு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கரைத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்த அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிது நிறம் மாறிய உடன் உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 3
இப்போது காய்கறியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகள் வேகும் வரை வேக விடவும். காய்கள் வெந்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும் நன்கு கொதித்தவுடன் புளித்தண்ணீரை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
- 4
ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். இவற்றை குழம்பில் சேர்க்கவும். சுவையான மனமான உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் தயார். சாப்பாட்டிற்கும் இட்லி தோசைக்கும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
-
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil
More Recipes
- வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
- வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
கமெண்ட் (2)