திணை அரிசி பணியாரம்(thinai arisi paniyaram recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

திணை அரிசி பணியாரம்(thinai arisi paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 கப் தினை அரிசி
  2. 1/4 கப் உளுந்து
  3. தேவையானஅளவு உப்பு
  4. தேவையானஅளவு எண்ணெய்
  5. தாளிப்பதற்கு
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 1/4 தேக்கரண்டி கடுகு
  8. 1மேஜைக் கரண்டி கடலை பருப்பு
  9. 3 காய்ந்த மிளகாய்
  10. 2மேஜைக் கரண்டி எண்ணெய்
  11. 1/2 தேக்கரண்டி சீரகம்
  12. 5 கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    திணை அரிசி மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தயார் செய்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    மாவிவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து குழி பணியாரம் மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

  4. 4

    குழிப் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்.

  5. 5

    மிகவும் ஆரோக்கியமான திணை அரிசி குழிப்பணியாரம் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes