ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#club
#LB

எங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 200 கிராம் காளான்
  2. 1/4 கிலோ முட்டைக்கோஸ்
  3. 3 டேபிள்ஸ்பூன் கார்ன்ப்ளார்
  4. 3 டேபிள்ஸ்பூன் மைதா
  5. 1 ஸ்பூன் அரிசி மாவு
  6. 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1_1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1 ஸ்பூன் பச்சைமிளகாய் விழுது
  10. தேவையான அளவுஉப்பு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு
  12. சாஸ் செய்ய:
  13. 4 பல் பூண்டு
  14. 1 பெரிய வெங்காயம்
  15. 1 பச்சைமிளகாய்
  16. 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  17. 2 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ்
  18. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  19. 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ப்ளார்
  20. 1/4 கப்+ 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர்
  21. 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
  22. 1/2 ஸ்பூன் மிளகுத் தூள்
  23. 1/4 ஸ்பூன் சாட் மசாலா தூள்
  24. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  25. 1 ஸ்பூன் சர்க்கரை
  26. சிறிதளவுஉப்பு
  27. 3 டேபிள்ஸ்பூன் பட்டர் அல்லது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காளானை சுத்தம் செய்து அலசி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்

    முட்டைக்கோஸை அதே போல் மெல்லியதாக நறுக்கவும்

  2. 2

    பின் இரண்டையும் சேர்த்து உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் மைதா மாவு கார்ன்ப்ளார் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்தில் பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பின் சூடான எண்ணெயில் பரவலாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  4. 4

    சாஸ் செய்ய பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் சில்லி சாஸ் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்க்கவும்

  5. 5

    சாஸ் எல்லாம் சேர்ந்து நன்றாக கலந்து கொதிக்க விடவும் பின் மிளகுத்தூள் கரம் மசாலா தூள் சாட்மசாலா தூள் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் பின் கார்ன்ப்ளார் மாவுடன் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி நன்கு கிளறவும்

  6. 6

    எல்லாம் சேர்ந்து நன்றாக கொதிக்க விடவும்

  7. 7

    சற்று திக்கானதும் பொரித்த மஷ்ரூம் முட்டைக்கோஸ் பக்கோடாவை உதிர்த்து சேர்த்து நன்கு கிளறவும் இரண்டு கரண்டி கொண்டு நல்லா கொத்தி விட வேண்டும்

  8. 8

    பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் மேலே சிறிது வெங்காயம் தூவி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes