*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#LB
குழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1பெரிய கத்தரிக்காய்
  2. 1/2 மூடிதேங்காய்
  3. 1 டேபிள் ஸ்பூன்க.பருப்பு
  4. 1 டேபிள் ஸ்பூன்உ.பருப்பு
  5. 2ப.மிளகாய்
  6. 6சி.மிளகாய்
  7. 2 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  8. ருசிக்குகல் உப்பு
  9. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  10. 1 டீ ஸ்பூன்கடுகு
  11. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  12. 1கோலி குண்டளவுபுளி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கத்தரிக்காயை சுத்தம் செய்து, 1 சொட்டு எண்ணெயை, அதன் மேல் நன்கு தடவிக் கொண்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து அதன் காம்பை பிடித்துக் கொண்டு எல்லா பக்கமும்,நன்கு சுடவும்.

  3. 3

    பிறகு அதனை தட்டில் ஆற விடவும்.

  4. 4

    பின் அதன் தோலை உரித்து, மசித்து, பௌலில் போடவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,க.பருப்பு, உ.பருப்பை சிவக்க வறுப்பட்டதும்,புளி, ப.மிளகாய், சி.மிளகாயை போடவும்.

  6. 6

    அடுத்து தேங்காய் துண்டுகளை போட்டு நன்கு வறுத்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    வறுத்த சூட்டிலேயை மசித்த கத்தரிக்காயை போட்டு ஒரு பிரட்டு பிரட்டிக் கொள்ளவும்.

  8. 8

    அடுத்து, நன்கு ஆறினதும், பெரிய மிக்ஸி ஜாரில்,உப்பு போட்டு கொரகொரப்பாக, அரைக்கவும்.

  9. 9

    அரைத்ததை பௌலில் எடுக்கவும்.கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு போடவும்.

  10. 10

    கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் தாளித்துக் கொட்டவும்.

  11. 11

    பிறகு நன்கு கலந்து குட்டி பௌலில் எடுக்கவும்.சுடு சாதத்தில் நெய் விட்டு,துவையலை கலந்து,சைட் டிஷ்ஷாக பொரித்த அப்பளம் வைத்து குழந்தைகளுக்கு, லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பவும்.வித்தியாசமாக இருக்கும்.குழந்தைகள் விரும்பியும் சாப்பிடுவார்கள்.செய்து அசத்தவும்.புளி சேர்ப்பதால்,துவையல் கெட்டுப் போகாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes