எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 1கப் வேகவைத்த மரவள்ளி கிழங்கு
  2. 1.5கப் கோதுமை மாவு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/2டேபிள் ஸ்பூன் சீரகம் தூள்
  6. 3ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    இது இரண்டு முறைகளில் செய்யலாம். முதல் முறை;
    வேக வைத்த கிழங்கு மீதி இருந்தால் அதை பயன் படுத்தலாம்.
    இரண்டாம் முறை: கிழங்கை மஞ்சள்,உப்பு சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து எடுக்கவும்.வேக வைத்த தண்ணீரை, விரும்பினால் மாவு பிசைய பயன்படுத்திக் கொள்ளலாம்.

  2. 2

    இந்த முறையில், நன்கு குழைவாக வேக வைத்து எடுப்பதினால், தண்ணீர் (அதிகம் தேவைப்படாது) கவனமாக சேர்த்து பிசைய வேண்டும்.
    வேக வைத்த பதத்திற்கேற்ப1.5-2கப் மாவு தேவைப்படும்.

  3. 3

    மாவுடன்,வேக வைத்து மசித்த கிழங்கு,மிளகாய் தூள், உப்பு, தேங்காய் துருவல்,சீரக தூள், நறுக்கிய வெங்காயம்,மல்லித்தழை கலந்து விட்டு பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக. பிசைந்து கொள்ளவும்.
    இரண்டு முறைகளுக்கும் தனித்தனியாக படங்கள் கொடுத்துள்ளேன்.

  4. 4

    நன்றாக ஒன்று சேர்த்து பிசைந்த பின் 15நிமிடங்கள் ஊறவிடவும்.பின் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
    பிடித்த உருண்டைகளை மாவு தூவி, சப்பாத்தியாக விரிக்கவும்.
    மாவு பிசையும் பொழுது,தண்ணீர் அதிகமாகி விட்டாலும் அல்லது அதிக நேரம் ஊற விட்டாலும் சப்பாத்தியாக விரிக்க வராது.

  5. 5

    விரிக்க வரவிலையெனில்,வாழை இலையில் என்ணெய் தடவி அதில் உருண்டைகளை வைத்து கையால் விரித்து விடலாம்.
    பின் தோசைக் கல் சூடானதும் எண்ணெய் விட்டு, விரித்த சப்பாத்திகளை 2புறமும் வேக விட்டு எடுக்கவும்.
    அவ்வளவுதான். சுவையான மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி ரெடி
    இதற்கு sidish ஏதும் தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம்.சுவையாக இருக்கும். விரும்பினால் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Zyba Fathima
Zyba Fathima @zybafathima
அன்று

Similar Recipes