கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சலித்த கோதுமை மாவை 6 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும் இது 12லிருந்து 14 ரொட்டி வரை வரும். சலித்த மாவில் 2 ஸ்பூன் அல்லது தங்களுக்கு தேவையான அளவு வர மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். மிகவும் பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூள் உப்பு அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும். முதலில் இவை அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் கைகளால் நன்கு கலந்து விட்டு கொள்ளவும். பிறகு ரொட்டி தட்டும் பதத்திற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும். வெங்காயம் சேர்த்திருப்பதால் அதுவே தண்ணீர் விடும்.
- 2
மேலே படத்தில் காட்டியுள்ளபடி மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.இரவு ரொட்டி செய்வது என்றால் காலை 10 மணி அளவிற்கு மாவை மேற்கூறியபடி தயார் செய்து கொள்ளவும். தயார் செய்த மாவை புளிக்காமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும். சுடுவதற்கு அரை மணி நேரம் முன்பு வெளியில் எடுத்து வைத்தால் போதும். தொட்டி கட்டுவதற்கு தேவையான அளவில் இலையை கட் செய்து கொள்ளவும் பிறகு இலையில் எண்ணெயை நன்கு தடவிக்கொண்டு தேவையான அளவு மாவை உருட்டி கையில் எடுத்து இலையில் வைத்து தட்டவும்.
- 3
ரொட்டியை பரவலாக தட்டும் பொழுது நன்கு தாராளமாக எண்ணெய் சேர்த்து தட்டவும் அப்பொழுதுதான் தட்டுவதற்கு வசதியாக இருக்கும். பிறகு காய்ந்த தோசைக்கல்லில் இலையை கவிழ்த்து போடவும். ஒரு நிமிடம் இலை யை விட்டு எடுக்க, இலை ஈஸியாக வரும்.
- 4
பிறகு இரண்டு புறமும் திருப்பிப்போட்டு சிவக்க எடுக்கவும் மிதமான தீயில் சிவக்க விடவும். இப்போது மிருதுவான சுவையான ஆரோக்கியமான கோதுமை ரொட்டி தயார். அவரவர் தேவைக்கேற்ப எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு புறமும் திருப்பி போடும் போது எண்ணெய் விட்டால் நன்றாக இருக்கும். உங்கள் விருப்பம் இது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சாம்பார் நன்றாக இருக்கும்.
- 5
இரவு செய்வது என்றால் காலையிலேயே மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைப்பது புளிக்காமல் இருப்பதற்கு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
#asma#npd1இதில் வெறும் கோதுமை மற்றும் இல்லாமல் பீட்ரூட்டும் கலந்து இருப்பதால் நமக்கு பீட்ரூடின் சத்தும் கிடைக்கிறது எனக்கு இது மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள் Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
-
-
ருமாலி ரொட்டி (Rumali roti recipe in tamil)
ருமாலி –உருது மொழி. சாஃப்ட் சில்க் கைக்குட்டை செய்ய உபயோகிப்பது. இந்த ரொட்டி அது போல தான். மிகவும் சோபதல் கைக்குட்டை போல அழகாக மடிக்கலாம் #flour1 Lakshmi Sridharan Ph D -
மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)
Spicy கோதுமை ஊத்தப்பம்... Meena Ramesh -
-
சீரக சப்பாத்தி(Jeera ghee roti recipe in tamil)
#Queen3Ithu குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சீரகம் வாசத்துடன் நெய் மணக்க மிருதுவாக இருந்தது. Meena Ramesh -
Wheat bread 🍞 veg omlette (easy to make) diabetic snacks
சர்க்கரை நோயாளிகள் மாலையில் காபியுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற மாலை உணவு. உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு செய்து தருவது என்றால் நெய் அல்லது வெண்ணெய் தாராளமாக விட்டுக் கொள்ளவும். டயட்டில் உள்ளவர்கள் அல்லது சர்க்கரை நோயாளிகள் என்றால் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
Gopi Patha aloo mutter subji recipe in tamil
#cooksnapsRecipie by Sudha Agarwal..बहुत-बहुत धन्यवाद सुधा।आपकी रेसिपी बहुत स्वादिष्ट थी। Meena Ramesh -
-
கேப்பை ரொட்டி(ragi roti recipe in tamil)
சிறு தானியங்களில் மிக முக்கியம் வாய்ந்தது கேப்பை. மிக எளிதாக கிடைக்கும் தானிய வகை. இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணும் உணவாக கேப்பை உள்ளது. கேப்பை கொண்டு பல வித உணவுகள் செய்யலாம். அதில் மாலை நேர உணவாக செய்யக் கூடிய கேப்பை ரொட்டி செய்முறை பற்றி பார்க்கலாம். #ku Meena Saravanan -
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
More Recipes
- கறிவேப்பிலை இட்லி பொடி(curry leaves idly powder recipe in tamil)
- * டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
- *மைசூர் ரசப் பொடி*(mysore rasam powder recipe in tamil)
- முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)
- லெக் பீஸ் ஃப்ரை(leg piece fry recipe in tamil)
கமெண்ட் (3)