விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VT
விரத நாட்களில் இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம்.குடமிளகாயில், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.வயது முதிர்வை தடுக்கும்.

விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t

#VT
விரத நாட்களில் இந்த பொரியல் செய்வது மிகவும் சுலபம்.குடமிளகாயில், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.வயது முதிர்வை தடுக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 1சிவப்பு குடமிளகாய் (ஆரஞ்சு)
  2. 1கப்துருவின தேங்காய் (வெள்ளை)
  3. 1 ஸ்பூன்கருவேப்பிலை (பச்சை)
  4. 1கப்மஞ்சள் குடமிளகாய்
  5. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  6. 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  7. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  8. தாளிக்க:-
  9. 1 டீ ஸ்பூன்கடுகு
  10. 1 ஸ்பூன்உ.பருப்பு
  11. 1 ஸ்பூன்க.பருப்பு
  12. 2சி.மிளகாய்
  13. 1ப.மிளகாய்
  14. ருசிக்குகல் உப்பு
  15. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சி.குடமிளகாய், ம.குடமிளகாயை பொடியாக நறுக்கவும்.தேங்காயை துருவிக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு வெடித்ததும், க.பருப்பு, உ.பருப்பை போட்டு சிவந்ததும், ப. மிளகாய், சி.மிளகாய் போட்டு தாளிக்கவும்.

  3. 3

    தாளித்ததும், மஞ்சள், சிவப்பு குடமிளகாய், உப்பு, போடவும்.

  4. 4

    அடுத்து, கருவேப்பிலை, தனி மி.தூள் போட்டு வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும், துருவின தேங்காயை போட்டு வதக்கவும்.

  6. 6

    ஒன்று சேர காய்கள் வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு தட்டில் மாற்றவும்.

  7. 7

    இப்போது, சுவையான, சுலபமான,*கலர்ஃபுல்,மஞ்சள்,சிவப்பு குடமிளகாய் பொரியல்* தயார். இந்த பொரியல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.செய்து அசத்தவும்.

  8. 8

    குறிப்பு:- தேவையான பொருட்களை புகை படத்தின் மூலம் நமது சுதந்திர தினத்தை ஓரளவிற்கு நினைவு படுத்தி இருக்கின்றேன்.ஜெய் ஹிந்த்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes