பெங்கால் ரசகுல்லா (Rasagulla recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#RD

பெங்கால் ரசகுல்லா (Rasagulla recipe in tamil)

#RD

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 1 லிட்டர் ஃபுல் கிரீம் பால்
  2. 1 டேபிள் ஸ்பூன் வினிகர்
  3. 1 டீஸ்பூன் மைதா மாவு
  4. 1 கப் சர்க்கரை
  5. 3 கப் தண்ணீர்
  6. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து கொதிக்கவிடவும். கலந்து விடவும். இல்லையில் அடி பிடிக்கும்.

  2. 2

    அத்துடன் வினிகர் சேர்த்து கலந்து விடவும்.பால் திரிய ஆரம்பிக்கும்.அப்போது ஸ்டவ் அனைத்துவிடவும்.

  3. 3

    பின்னர் எடுத்து ஒரு துணியில் ஊற்றி, கட்டி அரை மணி நேரம் தொங்க வைக்கவும். அப்போது பஞ்சு போன்ற கோவா கிடைத்து விடும்.

  4. 4

    அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து,நன்கு பிசையவும். அதில் ஒரு டீஸ்பூன் மைதா மாவு, ஒரு சொட்டு மஞ்சள் கலர் ஜெல் சேர்த்து, நன்கு பிசையவும்.

  5. 5

    பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி தயாராக வைக்கவும்.

  6. 6

    வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும்,சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். அத்துடன் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும். அப்போது ரசகுல்லா செய்ய சுகர் சிரப் தயார்.

  7. 7

    பின்னர் அதில் தயார் செய்து வைத்துள்ள ரசகுல்லா உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும். நன்கு உருண்டை பெரிய வடிவில் வடிவில் வரும். அப்போது ரசகுல்லா தயார்.

  8. 8

    தயாரான ரசகுல்லாக்களை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து, குங்குமப்பூ வைத்து அலங்கரிக்கவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையான பஞ்சு போன்ற மிருதுவான, குங்குமப்பூ மணத்துடன் பெங்கால் ராசகுல்லா
    சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (32)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
So Sweet.அருமையாக இருக்கிறது.சகோதரி.

Similar Recipes