விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CB - Bread
விரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
10 பரிமாறுவது
  1. 10-பிரெட் பீஸ்
  2. 100gm - பன்னீர்
  3. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. (தேவைக்கு)மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள்
  5. 2டேபிள்ஸ்பூன் வெண்ணை,
  6. 1 ஸ்பூன் தக்காளி சோஸ்
  7. 1/2 கப் பச்சை சட்னி
  8. உப்பு, ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கின மல்லி தழை

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    ஒரு பவுலில் துருவிய பன்னீர் மற்றும், மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

  3. 3

    எல்லா வற்றையும் நன்கு கலந்து தேவையான உப்பு, கொஞ்சம் வெண்ணை, டொமட்டோ சோஸ் கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து நீள வடிவில் பிடித்து வைத்துக்கவும்

  4. 4

    பிரெட் துண்டின் 4 ஓரங்கள் கட் செய்து எடுத்த பிறகு சப்பாத்தி கட்டை வைத்து லேசாக விரித்து முதலில் பச்சை சட்னி தேய்த்து பிறகு பன்னீர் மசாலா வைத்து மடித்து ரோல் செய்து எடுத்து வைத்துக்கவும்

  5. 5

    ஸ்டவ்வில் தவா வைத்து சூடானதும் மிதமான சூட்டில் ஒவொரு பிரெட் ரோலை எடுத்து வைத்து அதன் மேல் வெண்ணை தடவி இரண்டு பக்கவும் திருப்பி விட்டு நன்கு ரோஸ்ட் ஆனதும் எடுத்து விடவும்

  6. 6

    சுவையான மொறு மொறு பிரெட் மசாலா ரோல் தயார்.. டொமட்டோ சோஸ் மற்றும் பச்சை சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes