* அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#PJ
அவல் உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை தருகின்றது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
6 பேர்
  1. 3/4 கப்பேப்பர் அவல்
  2. 1/2 கப்பச்சை வேர்க்கடலை
  3. 1/2 கப்பொட்டுக்கடலை
  4. 1/4 கப்மெல்லியதாக நீளமாக நறுக்கின கொப்பரை
  5. 3/4 டீ ஸ்பூன்ம.தூள்
  6. 1 ஸ்பூன்தனி மி.தூள்
  7. ருசிக்குஉப்பு
  8. 2 டேபிள் ஸ்பூன்முந்திரி
  9. 2 டேபிள் ஸ்பூன்உலர்ந்த திராட்சை
  10. 1 ஸ்பூன்பெருங்காயத் தூள்
  11. 2 ஆர்க்குகறிவேப்பிலை
  12. 2 டேபிள் ஸ்பூன்தே.எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கொப்பரையை மெல்லியதாக நீள வாக்கில் நறுக்கவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து வெறும் கடாயில் அவலை போட்டு கருகாமல் வறுத்து, பௌலில் போடவும்.

  3. 3

    கடாயில், 1 டேபிள் ஸ்பூன், தே.எண்ணெய், காய்ந்ததும், வேர்க்கடலையை நன்கு வறுத்து பௌலில் சேர்க்கவும்.

  4. 4

    மீதமுள்ள எண்ணெயில், கொப்பரையை சிவக்க வறுத்து சேர்க்கவும்.

  5. 5

    அடுத்து, பொட்டுக்கடலை யை,வறுத்து சேர்க்கவும்.

  6. 6

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில்,1 டேபிள் ஸ்பூன் தே.எண்ணெய் காய்ந்ததும்,ம.தூள், மி.தூள், உப்பு,பெருங்காயத் தூள், கறிவேப்பிலையை, நன்கு வறுத்து சேர்க்கவும்.

  7. 7

    மீதமுள்ள எண்ணெயில், முந்திரி சிறிது வறுபட்டதும், திராட்சையை வறுக்கவும்.

  8. 8

    வறுத்ததை பௌலில் சேர்க்கவும்.

  9. 9

    பிறகு அனைத்தையும் கடாயில் போட்டு நன்கு கலக்கவும்.

  10. 10

    கலந்ததும், பௌலுக்கு மாற்றவும்.

  11. 11

    பிறகு, தட்டில் போடவும். இப்போது, சுவையான, சுலபமான,*அவல் மிக்சர்* தயார்.இதனை காற்றுப் புகாத கன்டெய்னரில் போட்டு, மாலை நேரத்தில், காபி, டீயுடன் சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes