எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. 150 கிராம் துவரம்பருப்பு
  2. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 1 டீஸ்பூன் கடுகு
  4. 1 டீஸ்பூன் சீரகம்
  5. .5 டீஸ்பூன் வெந்தயம்
  6. 1 கொத்து கருவேப்பிலை
  7. 2 தக்காளி
  8. சின்ன நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள
  9. 4 கத்திரிக்காய்
  10. 20 கிராம் பின்ஸ்
  11. 1 சௌ சௌ
  12. 2 டீஸ்பூன் உப்பு
  13. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. 3 டீஸ்பூன் தனியாத்தூள்
  15. 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  16. சிறிதளவுகொத்தமல்லி
  17. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  18. .5 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    துவரம் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பருப்பு ஊறிய பிறகு அதை கழுவி ஒரு குக்கரில் மாத்தி அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயத்தின் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    வெங்காயம் வதங்கிய பிறகு இப்போது அதில் கருவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்

  4. 4

    சாம்பார் தேவையான காய்கறிகளை நறுக்கி கழுவி வைத்து

  5. 5

    தக்காளி வதங்கிய பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கி அதனால் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  6. 6

    காய்கறிகள் வதங்கிய பிறகு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும் அதனுடன் புளி கரைசலையும் சேர்த்து 15 நிமிடம் கொதி க்க வைக்கவும்

  7. 7

    கடைசியாக கொத்தமல்லியை தூவி இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Rakshana
Rakshana @rakshana
அன்று

Similar Recipes