கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#Sr - ரசம்
நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

7-10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் பொடியாக நறுக்கின ஆப்பிள்
  2. 1 கப் பருப்பு தண்ணி
  3. 1-டீஸ்பூன் ரச பொடி
  4. 1 ஸ்பூன் ஒன்னிரண்டாக பொடித்த மிளகு சீரகம்
  5. 1தக்காளி,
  6. 2- வர மிளகாய்
  7. 1ஸ்பூன் நெய்
  8. 1 ஸ்பூன் கடுகு
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. உப்பு, கருவேப்பிலை, மல்லி தழை

சமையல் குறிப்புகள்

7-10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கவும். தேவையானவற்றை எடுத்து க்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணி ஊற்றி தக்காளி, ரச பொடி, மஞ்சள்தூள் கருவேப்பிலை சேர்த்து ஸ்டவ்வில் வைத்து கொதிக்க விடவும்.

  3. 3

    ஒரு வானலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஆப்பிளை சேர்த்து வதக்கவும்.ஆப்பிள் நன்கு வதங்கி வந்ததும் கரண்டியால் நன்கு மசித்து விடவும்

  4. 4

    தக்காளி நன்கு கொதித்து வெந்து வந்த பிறகு வதக்கி வைத்திருக்கும் ஆப்பிளை சேர்த்து கொதிக்கவிடவும்

  5. 5

    அத்துடன் பருப்பு தண்ணி ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நுரைத்து வரும்பொழுது ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும். (பெருங்காயம் சேர்த்து பருப்பு வேக வைத்து வைத்தி ருக்கிறேன்.)

  6. 6

    ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி கடுகு, ஒன்னிரண்டாக பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகம் கருவேப்பிலை தாளித்து ரசத்தில் ஊற்றவும்..

  7. 7

    கடைசியா கொத்தமல்லி தழை பிச்சி போட்டால் கம கமா வாசமுடன் அருமையான நிறத்தில் மிக சுவையான ஆப்பிள் ரசம் சாப்பிட தயார்... சூடு சாதத்துடன் ரசம் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்...... ரசம் சும்மா குடிக்கவும் அவளவு டேஸ்டா இருக்கும்.. 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes