டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Kk
குழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
  1. 1& 1/2 கப் மைதா மாவு
  2. 1/2கப் கோகோ பவுடர்
  3. 1 கப் சர்க்கரை பவுடர்
  4. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/2கப் தயிர்
  7. 1/2 கப் உருக்கிய வெண்ணெய்
  8. 3/4 கப் பால்
  9. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்அலங்கரிக்க
  10. அலங்கரிக்க:
  11. கலர் ஜேம்ஸ்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மைதா மாவு,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து,சலித்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பௌலில் தயிர் சேர்த்து குமிழ் வரும் வரை பீட் செய்யவும்.

  3. 3

    அத்துடன் பொடித்த சர்க்கரையை சலித்து சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

  4. 4

    அத்துடன் உருக்கிய வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் பீட் செய்யவும்.

  5. 5

    பின்னர் சலித்து வைத்துள்ள மைதா, சாக்லேட் மாவுக்கலவை சேர்த்து ஸ்பேட்டுலா வைத்து கட் அண்ட் போல்டு முறையில் கலந்து விடவும்.

  6. 6

    கொஞ்சம் கொஞ்சமாக பால், மைதா கலவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைக்கவும். இப்போது கேக் கலவை தயார்.

  7. 7

    பின்னர் டெட்டி பியர் கேக் மோல்டில் பட்டர் தடவி,மாவு தூவி கேக் கலவையை ஊற்றி,இரண்டு முறை டேப் செய்து தயாராக வைக்கவும்.

  8. 8

    பின்னர் மைக்ரோ வேவ் ஓவனில் 180டிகிரியில் 15நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து கேக் மோல்டை வைத்து 30நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான டெட்டி பியர் சாக்லேட் கேக் சுவைக்கத்தயார்.

  9. 9

    இந்த டெட்டி பியர் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes