சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 8 பரோட்டா பொடியாக கட் செய்தது
  2. 2கப் சிக்கன் க்ரேவி
  3. 400 கிராம் சிக்கன் க்ரேவியிலிருந்து எடுத்து உதிர்த்தது
  4. 8முட்டை
  5. 250 கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  6. 2 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. 2டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  9. சிறிதளவுஉப்பு
  10. 4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  11. 1/4கப் எண்ணெய்
  12. 1பெரிய தக்காளி பொடியாக கட் செய்தது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் வெந்ததும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கெட்டியானதும், சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பின்னர் க்ரேவி சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் பரோட்டா சேர்த்து நன்கு வதக்கவும். இதில் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes