வெஜ்ஜி ஸ்டிக்ஸ்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#KE

பச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன். விரும்பினால் நீங்கள் டீப் வ்ரை செய்யலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2மேஜை கரண்டி எண்ணை
  2. 1தேக்கரண்டி கடுகு
  3. 1தேக்கரண்டி சீரகம்
  4. சிறிதுபெருங்காயம்
  5. 1பச்சை மிளகாய், நறுக்கியது
  6. 1அங்குலம் தோலுரித்த இஞ்ஜி, நறுக்கியது
  7. 1தேக்கரண்டி மிளகாய் பொடி
  8. ½தேக்கரண்டி மஞ்சள் பொடி
  9. ½ கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  10. 1 கப் பச்சை பட்டாணி +கேரட், ஃரோஜன்
  11. ¼ கப் மெல்லியதாக வெட்டிய முட்டை கோஸ்
  12. ¼ கப் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  13. 1 தேக்கரண்டி பூண்டு பவுடர்
  14. 1 கப் பன்னீர் துருவல்
  15. 4 கப் மேஷ்ட் உருளை (பிரஷர் கூக்கரில் வேகவைத்து தோலூரித்தது
  16. 6 கப் பிரட் க்றம்பஸ் (bread crumbs)
  17. 2 கப் கார்ன் flakes பொடித்தது
  18. ½கப் கார்ன் ஸ்டார்ச்
  19. 1கப் என்ரிச்ட் கோதுமை மாவு
  20. ஆலிவ் ஆயில் ஸ்பிரே (olive OIL SPRAY)
  21. உப்பு தேவையானது
  22. ஸ்நாக்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு, சீரகம்,,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதிலேயே பச்சை மிளகாய், இஞ்ஜி, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பூண்டு பொடி சேர்க்க. பச்சை பட்டாணி +கேரட், முட்டை கோஸ், போட்டு கிளறி மேலும் 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில்வதக்க. உருளை சேர்த்து மசிக்க பன்னீர் துருவல், கொத்தமல்லி உப்பு சேர்த்து, கிளறவும்.. சிட்டிகை சக்கரை சேர்த்து கிளற. ஸ்ட்ரிப் செய்ய காய்கறிகள் தயார்

  4. 4

    காய்கறிகளை தட்டில் போட்டு பிசைக’ 3 கப் பிரட் க்றம்பஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்க, பிசைக. ஒரு தட்டின் மேல் பிளாஸ்டிக் SARAN WRAP போட்டு அதன் மேல் காய்கறிகள் கலவை சமமாக பரப்புக, மேலே SARAN WRAP போட்டு மூடுக. 1 மணி நேரம் ரேபிரிஜேரேட் செய்க. நன்றாக செட்டாகும்

    வெளியே எடுத்து செட்டான காய்கறிகளை கத்தியால் துண்டு போடுக; 4 அங்குல நீளம்,1½ அங்குல அகலம், ½ அங்குல திக் ; 12 ஸ்டிரிப்ஸ் செய்தேன்.

  5. 5

    வெளியே எடுத்து செட்டான காய்கறிகளை கத்தியால் துண்டு போடுக; 4 அங்குல நீளம்,1½ அங்குல அகலம், ½ அங்குல திக் ; 12 ஸ்டிரிப்ஸ் செய்தேன். கார்ன் ஸ்டார்ச், மாவூ கூட 8 கப் நீர் சேர்த்தது தண்ணியான கலவை செய்க. ஒரு போலில் 3கப் பிரட் க்றம்பஸ், கார்ன் flakes பொடித்தது சேர்த்து மிக்ஸ் செய்க, ஸ்டிரிப்ஸ் ஓவ்வொன்றாக மாவு கலவையில் முக்கி. பின் பிரட் க்றம்பஸ் கலவையில் ஒத்தி ஒரு தட்டில் வைக்க. இது போல 2 முறை செய்க. பேக் செய்ய தயார்.

  6. 6

    ப்ரீஹீட் ஓவன் 400F (205C). பேகிங் டிரே மேல் பார்ச்மேன்ட் பேப்பர் போடுக. ஆயில் ஸ்ப்ரே செய்க. வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ் அதன் மேல் அரேஞ்ச் செய்க, ஸ்டிரிப்ஸ் மேல் OIL SPRAY செய்க. ஓவன் உள்ளே டிரே வைத்து, ஓவன் மூடி 40 நிமிடங்கள் பேக் செய்க, க்ரிஸ்ப் ஆக வேண்டும். பொன் பிரவுன் ஆக வேண்டும். பேக் ஆகும் நேரம் உங்கள் ஓவனை பொருத்தது.

    சுவைத்த பார்க்க விருப்பமான சாஸ் கூட பரிமாறுக. நான் தக்காளி சாஸ், புளி சட்னி, சில்லி சாஸ் கூட பரிமாறினேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes