கிறிஸ்துமஸ் கோதுமை குக்கீஸ்(wheat cookies recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
4 பேர்கள்
  1. முக்கால்கப்கோதுமை மாவு-
  2. அரை கப்சர்க்கரை-
  3. கால் கப்கடலை மாவு -
  4. 4ஏலக்காய் -
  5. அரைகப்வெண்ணெய் -
  6. 2 பின்ச்பேக்கிங்சோடா-
  7. அரைஸ்பூன்பேக்கிங்பவுடர் -
  8. 1 பின்ச்உப்பு -
  9. சிறிதளவுசாக்லெட்சிப்ஸ் -
  10. சிறிதளவுவெள்ளை சாக்லெட்சிப்ஸ்-

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களைஎடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஏலக்காயைப்பொடி பண்ணிக் கொள்ளவும்.

  3. 3

    கோதுமை மாவு, கடலை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங்சோடா சேர்த்து வைக்கவும்.

  4. 4

    உப்பு 1 பின்ச் சேர்க்கவும்.சர்க்கரையை பொடி பண்ணவும்.வெண்ணெய்&சர்க்கரை பவுடரைசேர்க்கவும்.

  5. 5

    நன்கு வெள்ளைகலர் வரும் வரை மிக்ஸ்பண்ணவும்.

  6. 6

    சர்க்கரை&வெண்ணெய் கலவையை கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து சப்பாத்திமாவு போல் பிசையவும்.

  7. 7

    15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.பின் ஒரு கண்ணாடிடம்ளரால் சமப்படுத்தி டிசைன் பண்ணவும்.நான் சின்னதாக பண்ணி டிசைன்பண்ணியதால் கிளாஸ் use பண்ணினேன்.சப்பாத்தி கட்டையால் தேய்த்து கட் பண்ணலாம்.

  8. 8

    விருப்பமான வடிவத்தில் கட் பண்ணிக்கலாம்.மேலே சாக்லெட்சிப்ஸால் அலங்கரிக்கலாம்.ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஸ்டண்ட் போட்டு 10 நிமிடங்கள் free heat பண்ணவும்.

  9. 9

    என் அதில்தட்டு வைத்து பட்டர்பேப்பர் போட்டு அதில் வெண்ணெய்தடவவும். பின் கட் பண்ணிய பிஸ்கட்டை வைத்து மூடி போட்டுமூடி 15 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

  10. 10

    அடியில்சிவந்து வரும் போது எடுத்து விடலாம். சூடாக இருக்கும் போது சாப்டாக இருக்கும்.

  11. 11

    ஆறியதும் மொறுப்பாகிவிடும். கிறித்துமஸ் கோதுமை குக்கீஸ் ரெடி.குழந்தைகள் முதல்பெரியவர்கள்வரை விரும்பும் Homemade Biscuit.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes