எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
3 பேர்கள்
  1. பட்டாணி -அரைகப்
  2. பட்டர்பீன்ஸ்- அரை கப்
  3. தக்காளி - 1
  4. பீன்ஸ்காய்- 10
  5. காரட் - 1
  6. மல்லிதழை- சிறிதளவு
  7. உப்பு - தேவைக்கு
  8. சமையல்எண்ணெய்- 3ஸ்பூன்
  9. தண்ணீர் -தேவைக்கு
  10. குழம்பு மிளகாய்தூள் -1ஸ்பூன்
  11. கரம்மசாலா- அரைஸ்பூன்
  12. மஞ்சள்தூள்- கால்ஸ்பூன்
  13. சோம்பு -கால்ஸ்பூன்
  14. அரைத்தகுழம்புமிளகாய் கிரேவி- கால்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்தேவையானகாய்கள்,வெங்காயம்கட் பண்ணிக்கொள்ளவும். குக்கரை அடுப்பில்வைத்து தேவையான எண்ணெய்விட்டு சோம்பு,போட்டு பின்கட்பண்ணிய வெங்காயம்சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும்.குழம்பு மிளகாய்தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.

  3. 3

    மஞ்சள்தூள், உப்பு, அரைத்தமிளகாய் மசாலா சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    தேவையான தண்ணீர்சேர்த்து குக்கரைமூடி வேகவிடவும். 2 நிமிடத்தில்வெந்து விடும்.தேங்காய் சேர்க்காததால் விரைவில் கெட்டுப் போகாது.ஆபீஸ்,ஸ்கூலுக்கு கொடுத்துவிட ஏற்றது.நல்ல புரோட்டீன் மகளீர்கள் சுண்டல்மாதிரி சாப்பிடலாம்.மிக்ஸ்ட் புரோட்டீன் பொரியல்ரெடி. 🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes