விரதHome made Pav phaji Masala.(அரைத்துவிட்ட மசாலா)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#CB

விரதHome made Pav phaji Masala.(அரைத்துவிட்ட மசாலா)

#CB

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 1 pocketபாவ் பன்-
  2. 1தக்காளி-
  3. 4உருளைகிழங்கு -
  4. 8பீன்ஸ்காய்-
  5. 1காரட் -
  6. 1 கைப்பிடிஅளவுபச்சை பட்டாணி-
  7. அரைக்க
  8. அரைஸ்பூன்வறுத்தமல்லி (தனியா) -
  9. அரைஸ்பூன்வறுத்தசீரகம் -
  10. அரைஸ்பூன்சோம்பு -
  11. அரைஸ்பூன்மஞ்சள்தூள்-
  12. அரைஸ்பூன்சீரகத்தூள்-
  13. அரைஸ்பூன்மல்லித்தூள்-
  14. அரைஸ்பூன்கரம்மசாலா-
  15. தேவைக்குஉப்பு -
  16. 1 துண்டுஇஞ்சி -
  17. 6பூண்டு பல்-
  18. தாளிக்க(வதக்க)
  19. 2தக்காளி-
  20. 2பெரியவெங்காயம்-
  21. தேவைக்குமல்லி தழை-(நிறையசேர்த்தால்நன்றாகஇருக்கும்)
  22. 2 துண்டுபட்டை-
  23. 3கிராம்பு -
  24. 2காஷ்மீர்மிளகாய் -
  25. 2வரமிளகாய்-
  26. 2ஸ்பூன்வெண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் பாவ்பன் வாங்கிக்கொள்ளவும்.பின் தேவையான காய்களை பெரிதாக கட் பண்ணிக்கொள்ளவும்.குக்கரில்கொஞ்சம் தண்ணீர்விட்டு அதில் கட் பண்ணிய உருளைக்கிழங்கு,பீன்ஸ்காய்,காரட்,தக்காளி,பட்டாணி எல்லாவற்றையும் போட்டு 4 விசில் வந்ததும் சிம்மில் 2 நிமிடங்கள் வைத்துபின் கேஸை ஆப் பண்ணவும்.

  2. 2

    அரைக்க தேவையானதை எடுத்து வைக்கவும்.இஞ்சி,பூண்டுகட் பண்ணிக்கொள்ளவும்.

  3. 3

    காய்கள் வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ளவும்.வதக்க வெங்காயம், தக்காளியை சிறிதாக கட்பண்ணிக் கொள்ளவும்.மல்லிதழையையும் சிறிதாககட்பண்ணிக்கொள்ளவும்.சிறிதளவு இஞ்சியைபொடியாக தனியாககட் பண்ணிக் கொள்ளவும்.

  4. 4

    அரைக்க-மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள்,கரம்மசாலாபவுடர்,பட்டை, கிராம்பு,வரமிளகாய், காஷ்மீர்சில்லி, இஞ்சி,பூண்டு, உப்பு எல்லாவற்றையும் அரைத்துக்கொள்ளவும்.(இதுதான்ஸ்பெசல் அரைத்த மசாலா)

  5. 5

    பின்வேறுஒரு வாணலியை அடுப்பில்வைத்து வெண்ணெய் 2ஸ்பூன் போடவும்.அதில் கொஞ்சம்கட்பண்ணிய இஞ்சி,வெங்காயம், தக்காளி,மல்லி தழையைப் போட்டு நன்கு வதக்கவும்.

  6. 6

    நன்குகிரேவி பதம் வந்ததும் அரைத்த மசாலைச்சேர்க்கவும்.பின் மசித்த உருளைகிழங்கு,காய்களைச்சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.

  7. 7

    நன்கு கிரேவி போல் சேர்ந்து வந்ததும் கீழே இறக்கிவைத்து அரை எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்.பாவ் பாஜி மசாலாரெடி.பின் பாவ் பன்னை இரண்டாக கட் பண்ணி தோசை வாணலியில் பட்டர்போட்டு லேசாக டோஸ்ட் பண்ணவும்.கடை ஸ்டைலில் கொஞ்சம் மசாலாவை வாணலியில் பன்னோடு போட்டு எடுத்து அப்படியே பரிமாறலாம்.

  8. 8

    பின் ஒரு தட்டில் கொஞ்சம்வெங்காயம்மல்லி தழை,பன்&மசாலா எடுத்து வைத்து பரிமாறவும். 🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes