காஞ்சிபுரம் இட்லி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#காலைஉணவுகள

பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு
  1. பச்சரிசி. - ஒரு கப்
  2. இட்லி அரிசி. - ஒரு கப்
  3. உளுந்தம் பருப்பு - ஒரு கப்
  4. வெந்தயம். - ஒரு தேக்கரண்டி
  5. உப்பு. - தேவையான அளவு
  6. நல்லெண்ணெய். - 2 மேசைக்கரண்டி
  7. நெய். - 2 மேசைக்கரண்டி
  8. முந்திரிப் பருப்பு -6
  9. கடுகு உளுந்தம் பருப்பு - அரைத் தேக்கரண்டி
  10. கடலைப் பருப்பு - அரைத் தேக்கரண்டி
  11. மிளகு. - அரைத் தேக்கரண்டி
  12. சீரகம். - அரைத் தேக்கரண்டி
  13. சுக்குப் பொடி - ஒரு தேக்கரண்டி
  14. கறிவேப்பிலை. - ஒரு ஆர்க்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறியதும் சற்று கரகரப்பாக அரைத்து வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பத்து மணிநேரம் புளிக்க விடவும்.

  3. 3

    பத்து மணிநேரம் கழித்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு,கடலைப் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த மாவில் சேர்க்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு சீரகம், வறுத்து மாவில் சேர்க்கவும்.

  4. 4

    மாவை டம்ளர்கள் அல்லது சிறிய கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் சுமார் இருபது நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

  5. 5

    வெந்ததும் சற்று ஆறவைத்து எடுத்து சட்னி, சாம்பார் அல்லது கத்தரிக்காய் கொத்சுடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes

More Recommended Recipes