பால் கொழுக்கட்டை

Subhashni Venkatesh
Subhashni Venkatesh @cook_16039991

சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. பச்சரிசி 2 கப்
  2. பொடித்த வெல்லம் 1 1/2 கப்
  3. நெய் 3 தேக்கரண்டி
  4. ஏலக்காய் பொடி 1/2 தேக்கரண்டி
  5. குங்குமப்பூ சிட்டிகை
  6. கெட்டி தேங்காய் பால் 2 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை களைந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்த மாவில் நீர் சேர்த்து கரைக்கவும்.

  3. 3

    கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைத்த மாவு, 2 தேக்கரண்டி நெய் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். சிறிது நேரத்தில் மாவு கெட்டியாக தொடங்கும்.

  4. 4

    கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    மாவு ஆறியவுடன் கையிலொரு ஸ்பூன் நெய்யை தடவிக் கொண்டு மாவை நன்கு அழுத்தி கட்டியில்லாமல் பிசையவும். சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  6. 6

    வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொண்டு, தூசியில்லாமல் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    அதில் உருண்டைகளை நிதானமாக போட்டு, பாத்திரத்தை மூடவும்.

  8. 8

    மீடியம் flame இல் வேகவிடவும். (7 முதல் 10 நிமிடங்கள்)

  9. 9

    இபோழுது மூடியை திறக்கவும். உருண்டைகள் வெந்து மிதப்பதை பார்க்க முடியும். அதில் ஏலப்பொடி, கெட்டி தேங்காய் பால் குங்குமப்பூ சேர்த்து உடன் அடுப்பை அணைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Subhashni Venkatesh
Subhashni Venkatesh @cook_16039991
அன்று

Similar Recipes