தேவையான பொருட்கள்

  1. பாசுமதி அரிசி (or) சஈரக சம்பா அரிசி – 2 கப்
  2. வெங்காயம் – 2
  3. தக்காளி – 2
  4. பச்சை மிளகாய் – ஒன்று
  5. கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ
  6. மீல் மேக்கர் – சிறிது
  7. வற்றல்தூள் – 1 1/2 ஸ்பூன்
  8. உப்பு – தேவைக்கேற்ப‌
  9. புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  10. இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  11. எண்ணெய் – 2 ஸ்பூன்
  12. நெய் – 1 ஸ்பூன்
  13. பட்டை – சிறு துண்டு
  14. கிராம்பு – 2
  15. ஏலக்காய் – ஒன்று
  16. பிரிஞ்சி இலை – ஒன்று
  17. பொடிக்க‌:
  18. மிளகு – 10
  19. சீரகம் – 1/2 ஸ்பூன்
  20. பெருஞ்சீரகம் – 1/2 ஸ்பூன்
  21. மல்லிவிதை - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற‌ வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மீல் மேக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க‌ விடவும். நன்கு கொதித்து உப்பி வந்ததும் இறக்கி தண்ணீர் வடித்து ஒன்றிரண்டாக‌ நறுக்கவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    வதக்கியவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    காய்கறிகளுடன் வற்றல்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து ஊற‌ வைத்த‌ அரிசியை சேர்த்து மெதுவாக‌ அரிசி உடைந்து விடாமல் கிளறவும்.

  5. 5

    குக்கரில் ஆவி வரும் போது சிம்மில் வைத்து ஆவி அடங்கியதும் திறந்து கரண்டியால் அடி வரை நன்கு கிளறி மீண்டும் மூடி தீயை அதிகமாக‌ வைத்து வெயிட் போடவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.

  6. 6

    சுவையான வெஐ்ஃபிரியாணி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes