சீரக சம்பா சென்னா புலவ்

Iswarya
Iswarya @cook_17224977
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3-4 பரிமாறுவது
  1. சீரக சம்பா பச்சரிசி 1.5 கப்
  2. வெள்ளை கொண்டைக்கடலை 1 கப்
  3. பட்டை சிறிய துண்டு
  4. அண்ணாசிப்பூ 1
  5. கிராம்பு 2
  6. இஞ்சி பூண்டு விழுது-2 டீ ஸ்பூன்
  7. வெங்காயம் 1(பொடியாக நறுக்கியது)
  8. பிரிஞ்சி இலை 1
  9. மஞ்சள் தூள் 1 டீ ஸ்பூன்
  10. தக்காளி 1(பொடியாக நறுக்கியது)
  11. மிளகாய் தூள் 1.5 டீ ஸ்பூன்
  12. மல்லித்தூள் 1.5 டீ ஸ்பூன்
  13. கரம் மசாலா தூள் 1 டீ ஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. நெய்/எண்ணெய் 3-4 கரண்டி
  16. தண்ணீர்
  17. கொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கொண்டைக்கடலை மை போதுமான தண்ணீர் சேர்த்து 7-8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் நன்றாக வேகவைத்து எடுக்கவும்

  2. 2

    குக்கரில் நெய் விட்டு பிரிஞ்சி இலை,கிராம்பு முதலிய மசாலா சாமான்களை சேர்க்கவும்.

  3. 3

    பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்

  4. 4

    இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  5. 5

    பின்னர் 2.5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், சீரக சம்பா அரிசி, வேக வைத்த கொண்டைக்கடலை இரண்டையும் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.

  6. 6

    ஸ்டீம் போனவுடன் கொத்தமல்லித்தழையை மேலே தூவவும். சீரக சம்பா சென்னா புலாவ் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Iswarya
Iswarya @cook_17224977
அன்று

Similar Recipes